நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் நாலும் தெரிஞ்ச ரூட் காரன்! பழசை மறக்காத கும்பகோணம் மேயர் சரவணன்!
தஞ்சாவூர்: தற்போது மேயர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தாலும் அடிப்படையில் தாம் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதால் அதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன்.
ஆயுத பூஜையை ஒட்டி தனது ஆட்டோவை தாமே கழுவி சுத்தம் செய்து பெரியகடை வீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு ஆட்டோவை ஓட்டி வந்த மேயர் சரவணன், அங்கு தனது சக ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுடன் பூஜையில் பங்கேற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சாதாரண வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநர் சரவணனை, மேயராக்கி அழகு பார்த்த கட்சி காங்கிரஸ் என்பது கவனிக்கத்தக்கது.

கும்பகோணம் மேயர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரியகடை வீதி ஆட்டோ ஸ்டாண்டில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்தவர் சரவணன். காங்கிரஸ் கட்சியில் உள்ள இவர், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அங்கு யார் மேயராக வரக்கூடும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் கே.எஸ்.அழகிரியோ ஒரு பெரிய ட்விஸ்ட் வைத்தார்.

மிகவும் எளிமை
அவர் வரப்போகிறார் இவர் வரப் போகிறார் என கற்பனை குதிரைகள் பறந்த நிலையில், சாதாரண ஆட்டோ ஓட்டுநரான சரவணனை மேயர் வேட்பாளராக அறிவித்தார் கே.எஸ்.அழகிரி. இதையடுத்து கும்பகோணம் மேயராக பதவியேற்றுக் கொண்ட சரவணன், இன்னுமே தனது பழைய நிலைகளை மறக்காமல் எளிமையை பின்பற்றி வருகிறார். காலணி தொடங்கி ஆடைகள் வரை மேயராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே பாணியை தான் பின்பற்றி வருகிறார்.

பந்தா இல்லாதவர்
இதனிடையே மேயராகிவிட்டோம் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் வழக்கம் போல் ஆயுதபூஜையான நேற்று தனக்கு வாழ்வாதாரம் தந்த ஆட்டோவை கழுவி சுத்தம் செய்து பெரிய கடைவீதி ஆட்டோ ஸ்டாண்டிற்கு தாமே ஓட்டிச் சென்றார் மேயர் சரவணன். பழசை மறக்காத சரவணனின் குணத்தை பார்த்த அவரது சக ஆட்டோ ஓட்டுநர் நண்பர்கள் அவரை கொண்டாடினர். இதனிடையே இது குறித்து தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் பதிவு வைத்துள்ள அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டாண்டிற்கு எனது ஆட்டோவை நானே ஓட்டிச் சென்றது மன நிறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குணத்திலும் தங்கம்
இதேபோல் மேயர் சரவணன் குணத்திலும் தங்கம் என்ற பெயரை எடுத்திருக்கிறார். இதுவரை அதட்டி மிரட்டி யாரிடமும் பேசியது கிடையாது. பதவி வரும் போது பணிவு வர வேண்டும் தம்பி என்ற சினிமா பாடலுக்கு உதாரணமாக தனது வாழ்வியல் முறையை அமைத்துக் கொண்டுள்ளார் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications