ஸ்வீட் எடு கொண்டாடு! சின்னம்மா வாழ்த்துங்கம்மா.. சசிகலாவிடம் உருகிய வைத்திலிங்கம்! இது ட்ரைலர் தான்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சசிகலாவை ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கம் இன்று திடீரென சந்தித்து பேசிய நிலையில் அவருக்கு சாக்லேட் கொடுத்து சசிகலா பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இது ட்ரைலர் தான் எனவும் விரைவில் மெயின் பிக்சரை பார்க்க போகிறீர்கள் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்

பரபரப்புகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிமுக விவகாரம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக ஊடகங்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

நாங்கள் தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் என பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்குள் சண்டை போட்டு வந்த நிலையில் நாங்கள் இருக்கும் வரை நாங்கள் தான் பேசுபொருள் என்பதை நிரூபிப்பது போலவே அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிமுக தொடர்பான செய்திகளை ஆக்கிரமித்து இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி


அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை.

 ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஆனால் அது விரைவில் நடைபெறும் என உறுதியாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதனால் சசிகலா தரப்பு, டிடிவி தினகரன் தரப்பில் இருந்த நிர்வாகிகளும், ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் தென் மண்டல நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சசிகலாவுக்கு எதிராக வீசி அஸ்திரமே தற்போது அவர்கள் இணைவதற்கு தடைக்கல்லாக இருப்பதாக கூறுகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

சசிகலா சுற்றுப் பயணம்

சசிகலா சுற்றுப் பயணம்

இந்நிலையில் தஞ்சாவூருக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காேயில் விழாக்கள் மற்றும் தொண்டர்களை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஒரத்தநாட்டில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் சசிகலா பங்கேற்றுள்ளார். இந்த திருமணத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றுள்ளார்.

வைத்தியலிங்கம் சந்திப்பு

வைத்தியலிங்கம் சந்திப்பு

அப்போது, சசிகலாவை அவர் திடீரென சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே, வைத்திலிங்கத்திற்கு இன்று பிறந்தநாள் என்று சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே, அவருக்கு சாக்லெட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா. அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரல்கள் எழுந்து வரும் நிலையில் சசிகலாவும், வைத்திலிங்கமும் சந்தித்து பேசியிருப்பது அதிமுகவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

மெயின் பிக்சர்

மெயின் பிக்சர்

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் இணைய இருப்பதாக ஏற்கனவே பல மாதங்களாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதுவரை அதற்கான எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தான் தஞ்சாவூரில் வைத்தியலிங்கம் சசிகலாவை சந்தித்து இருப்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை எச்சரிக்கும் வெறும் டிரைலர் தான் எனவும் விரைவில் சசிகலா ஓ பன்னீர்செல்வம் தினகரன் ஆகியோரின் சந்திப்பு குறித்த மெயின் பிக்சர் வெளியாகும் என்கின்றனர் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+