பாக்., சொல்வதைக் கேட்டால் இந்தியனுக்கு அவமானம்… தம்பிதுரை கருத்து

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: பாகிஸ்தான் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாகிஸ்தான் சொல்வதையும், சான்றிதழ் கொடுப்பதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.

Pakistan former Prime Minister praise to Rahul; Thambidurai Comment

பாகிஸ்தான் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக் கொண்டால் இந்தியனுக்கு அவமானம் என்றும், பாகிஸ்தானுடன் நல்ல நட்பு நமக்கு கிடையாது என்றும் கூறினார்.

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதேநேரம், பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்தது .

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முஷாரப், மோடி மோசமானவர் என்றும் ராகுல் காந்தி நல்லவர் என்றும் சான்றிதழ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+