• search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலித்துகள் முடிவெட்ட தடை.. இரட்டை குவளை முறை! அதுவும் தமிழ்நாட்டில் - நெஞ்சை உறைய வைக்கும் தீண்டாமை

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே கிளாம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் சலூன் கடைகளில் முடிவெட்ட தடை விதித்ததுடன், தீண்டாமையை பின்பற்றும் வகையில் இரட்டை குவளை முறை கடைபிடிக்கப்படுவதாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள அவர், "தஞ்சை ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் பட்டியலினத்தவருக்கு இரட்டைகுவளையும், முடிவெட்ட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவலறிந்து கடந்த அக் 27ம் தேதி மே 17 இயக்க தோழர்களுடன் நானும், தோழர்.அரங்க குணசேகரனும் கள ஆய்விற்கு சென்றோம்.

அப்பகுதியில் இருக்கும் மே 17 தோழர்களுடன் சென்று ஆய்வு செய்ததில் இரட்டைக்குவளை முறை கிளாமங்கலம் தெற்கு எனும் கிராமத்தில் வழக்கத்தில் இருப்பதும், முடிவெட்ட அனுமதி மறுப்பதையும் அந்த ஊர் மக்கள் தெரிவித்தார்கள்.

ஊரை விட்டு ஒதுக்குறோம்.. ஒரத்தநாட்டில் தீண்டாமை! தலித்துகளுக்கு பொருள் விற்க மறுப்பு -பகீர் வீடியோ ஊரை விட்டு ஒதுக்குறோம்.. ஒரத்தநாட்டில் தீண்டாமை! தலித்துகளுக்கு பொருள் விற்க மறுப்பு -பகீர் வீடியோ

ஆட்சியரிடம் முறையிட முடிவு

ஆட்சியரிடம் முறையிட முடிவு

இதனடிப்படையில் தஞ்சை ஆட்சியாளரிடம் முறையிடுவது என்றும், இதற்கு முன் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையை கவனத்தில் கொண்டு செல்வது பற்றியும் முடிவெடுத்தோம். நவ 14ம் தேதி ஆட்சியாளரை சந்திக்க முடிவெடுத்ததை அறிந்து இரட்டைகுவளை, முடிவெட்டுதலில் ஒதுக்குதல் ஆகியவற்றை கைவிடுவதாக சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துபூர்வமாக ஊர்மக்களிடம் தெரியப்படுத்தியதை அறிந்தோம்.

பட்டியலின மக்களுக்கு தடை

பட்டியலின மக்களுக்கு தடை

இதனால் ஆட்சியாளர் சந்திப்பை தள்ளிவைத்த நிலையில் நவ 28 காலையில் ஒடுக்குமுறையை ஏவுகிறவர்கள். கிராம கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற பெயரில் தனித்து செயல்பட்டு, பட்டியலின மக்களுக்கு ஊருக்குள் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுக்கக்கூடாது என கடைகளுக்கு தடை விதித்தனர். இதை மீறுபவர்களுக்கு அபராதம் எனவும் முடிவெடுத்ததாக அறிவித்தனர்.

பதற்றம் ஏற்படுத்த முயற்சி

பதற்றம் ஏற்படுத்த முயற்சி

இதை ஊர் மக்கள் மே 17 தோழர் ராஜேந்திரனுக்கு தெரிவித்து, எனக்கும் அரங்க குணசேகரனுக்கும் தகவல் தெரிவித்தனர். பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்துவோமென சிலர் தெரிவித்ததை உடனடியாக திமுக அரசின் கவனத்திற்கும், தஞ்சை ஆட்சியாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். மாலையில் பதட்டமேற்படுத்தும் சில இளைஞர்களை திரட்ட முயன்றதை காவல்துறைக்கு தெரிவித்ததையடுத்து இரவு 10 மணிக்கு காவலர்கள் கிராமத்திற்கு சென்று கூடியவர்களை கலைத்தனர்.

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர்

இது போன்ற சாதிய வன்மத்துடன் இன்றளவும் தொடரும் போக்கினை எதிர்கொள்ளும் வகையில் நேரடியாக செல்வதென முடிவெடுத்து இருந்தோம். ஆட்சியாளர் அவர்கள் களஆய்விற்காக அதிகாரிகளை அனுப்பி வைத்துவிட்டு என்னை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

நிரந்தர தீர்வு

நிரந்தர தீர்வு

ஆய்வு மேற்கொண்டிருக்கும் அதிகாரிகள் இந்த சாதிய வன்மத்தினை தொடருவதும், தூண்டுவதுமாக இருக்கும் நபர்கள் மீது உடனடியாக சட்டரீதியாக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதும், இரட்டைக்குவளையை கடைபிடிக்கும் கிராமங்களை கண்டறிந்து களைந்தால் மட்டுமே இதை நிரந்தரமாக தடுக்கலாம்.

சாதிய ஒடுக்குமுறை

சாதிய ஒடுக்குமுறை

சாதிய வன்முறையாளர்களை தனிமைப்படுத்தி சட்டத்தின் கீழ் தண்டித்திட வேண்டும். பட்டியல் மக்களை மேலும் சாதிய வன்மத்துடன் சாதி ஆதிக்க நபர்கள் அணுகுவார்களெனில் அதற்கு எதிராக மே 17 இயக்கம் சமரசமில்லாமல் உறுதியாக போராடும். பட்டியலின மக்களுக்கு கடைகளி்ல் பொருட்கள் விற்க தடை, முடிவெட்ட தடை, இரட்டைக் குவளை ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முனையும் நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்ய வேண்டுமெனும் கோரிக்கையை மே17 இயக்கம் எழுப்புகிறது.

போராடுவோம்

போராடுவோம்


இச்சாதிய நபர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் சாதி வன்முறை மீண்டும் எழுமெனில் காவலர்கள், அதிகாரிகள், இன்று கிராமத்திற்கு சென்றவர்கள் என அனைவருமே பொறுப்பிற்கு உள்ளாக்கப்பட்டு துறைரீதியான நடவடிக்கைக்கு மே17 இயக்கம் தனது போராட்டத்தினை முன்னெடுக்கும்.

சாதியம் ஒழிப்போம்

சாதியம் ஒழிப்போம்

ஆதிக்க உணர்வோடு பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து மே17 இயக்கம் தொடர்ந்து போராடும். இச்சிக்கலை தொடர்ந்து கண்காணித்து நிரந்தர தீர்வு எட்டும் வரை மே17 இயக்கம் ஓயாது. சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் சாதியம் ஒழிக்க கைகோர்ப்போம்." என்று பதிவிட்டு உள்ளார்.

English summary
The coordinator of the May 17 movement Thirumurugan Gandhi, said that the Scheduled Caste people in Kilambakkam village near Orathanadu have imposed a complete ban on salons and the double mug system is being followed to follow untouchability.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X