இப்படியே போனால்.. தஞ்சாவூர் சென்னையை முந்திவிடும் போலயே.. நெருங்குது கிளைமேக்ஸ்.. என்ன நடந்தது?
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் ஐடி பார்க் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களே அங்கே ஐடி பார்க் திறப்பதற்கான பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஐடி பார்க்குகள் என்றால் சென்னை, கோவை என்று மட்டும் இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறி வேறு வேறு மாவட்டங்களுக்கு ஐடி பார்க்குகள் செல்ல தொடங்கி உள்ளன.

அந்த வகையில், தஞ்சாவூரில் டைடல் நியோ ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. இங்கே கட்டப்பட்டு வரும் பார்க்கின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கே வேகமாக ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. அசுர வேகத்தில் இதன் கட்டுமானம் நடப்பதால் இந்த வருட இறுதியில் இதன் கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார்குடி எம்எல்ஏ மற்றும் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா டெல்டாவிற்கு ஐடி துறையை கொண்டு வர வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்ததன் விளைவாக இந்த டைடல் பார்க் தஞ்சாவூருக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டின் புதிய தொழில்துறை அமைச்சராக அமைச்சர் டிஆர்பி ராஜா பதவி வகித்து வருகிறார். தமிழ்நாட்டின் இளமையான அமைச்சர்களில் இவரும் ஒருவர். தற்போது சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் இவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
தொழில்துறை அமைச்சரான இவர் தற்போது தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் கூட தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்தது. தமிழ்நாட்டில் கூகுள் தொடங்கி ஈவி தொழிற்சாலைகள், புதிய ஐடி பார்க்குகள், கார் தொழிற்சாலைகள் குவிந்து வருகின்றன. கர்நாடகாவிலும் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள், செமி கண்டக்டர் நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகின்றன. அதேபோல் முதலீட்டாளர்கள் மாநாடும் இன்று நடக்க உள்ளது.
அதிரடி வறிவிப்புகள்: பல சுவாரசியமான.. அதிரடி அறிவிப்புகள்.. ஒப்பந்தங்கள் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளன. வின்பாஸ்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாடு வரும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கொண்டு செல்ல அமைச்சர் டிஆர்பி ராஜா தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக தற்போது தஞ்சாவூரில் ஐடி பார்க் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தஞ்சைக்கும் ஐடி துறை வரும் வகையில்.. டெல்டா மக்கள் சென்னைக்கு வேலைக்கு செல்லாமல்.. எளிதாக 1- 2 மணி நேர பயணத்தில் ஐடி பணிகளை செய்ய வசதியாக இந்த நியோ டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. இந்த பார்க் கட்டப்பட்டால் மன்னார்குடியில் இருந்து 1 மணி நேரத்தில் ஐடி பார்க் வேலைக்கு செல்ல முடியும். மன்னை எக்ஸ்பிரஸில் 10 மணி நேரம் பயணித்து சென்னை செல்ல வேண்டியது இல்லை.
பணிகள் வேகம்: இதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா - முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர். அதில், சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் டிஆர்பி ராஜா இந்த பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.
கட்டுமானம்: இந்த நிலையில்தான் தற்போது தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் டைடல் நியோ ஐடி பார்க்கிங் புகைப்படம் வெளியாகி உள்ளது. இங்கே வேகமாக ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. மிக வேகமாக இங்கே கட்டுமானம் பணிகள் நடக்கின்றன., இங்கே கட்டுமானம் மேலவஸ்தச்சாவடி ஜங்சன் பகுதியில் வந்துள்ளது. இந்த கட்டுமானம் வேகமாக வளர்ந்து வருவது மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஓசூர், கோவை, தஞ்சை, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 10 புதிய தகவல் தொழில்நுட்ப (தகவல் தொழில்நுட்ப) பூங்காக்கள் அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில்தான் தஞ்சையில் , 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க் தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம்கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications