காதலுக்கு குறுகே நின்ற பெற்றோர்! சைக்கோவாகி தாய்-தந்தையை கொலை செய்த மகன்! இறந்த உடல்களுடன் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தில்லையம்பூர் பகுதியில் தாய் - தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்கள் பிரேதத்துடன் சமைத்து சாப்பிட்டு வந்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை சம்பவங்கள் தமிழகத்தில் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் பெரும்பாலானவை திட்டமிடப்படாதவையாகவும் அல்லது குடிபோதையில் நிகழ்ந்து வருகிறது. அதைத் தாண்டி சில சம்பவங்கள் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கும்பகோணத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் தான் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காதலால் சைக்கோவான இளைஞர் ஒருவர் தனது பெற்றோரை கொலை செய்திருக்கிறார் அதுவும் இரண்டு நாட்கள் சடலத்துடன் சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்.

கும்பகோணம் ஷாக்

கும்பகோணம் ஷாக்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தில்லையம்பூர் அக்ரஹரத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ஒரு மகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயரிழந்துள்ளார்‌. மேலும் மகளும் திருமணம் ஆகி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மகன் ராஜேந்திரன் மட்டுமே தில்லையம்பூரில் வசித்து வருகிறார்.

காதல் தோல்வி

காதல் தோல்வி

இந்நிலையில் ராஜேந்திரன் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் ஆனால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முன் வராததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அடிக்கடி தாய் தந்தையுடன் ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தாய் தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

பெற்றோர் கொலை

பெற்றோர் கொலை

இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் பிரேதத்துடன் இரண்டு நாட்கள் வீட்டின் உள்ளே சாப்பிட்டு சர்வ சாதாரணமாக இருந்துள்ளார். மேலும் கொலை நடந்த இந்த இரண்டு நாட்களும் காலை எழுந்து அருகில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணை

விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உள்ளே சென்ற பார்த்தபோது இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தஞ்சையில் இருந்து மூப்பனார் சோழா மற்றும் தடய அறிவியல் உதவி ஆய்வாளர்கள் கீதா கார்த்திக்கையும் சோதனை செய்து வருகிறார்கள் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மகன் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+