பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தஞ்சாவூரில் பேசிய விஜய், விவசாயிகளுக்கான தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். பயிர் கடன் ரத்து, உயர்கல்வி உதவி உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை செங்கிப்பட்டி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், "டெல்டா விவசாயிகள் சமிபத்தில் கூட உரத்தட்டுப்பாட்டை சந்தித்தனர். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன்கள் முழுமையாக ரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

tvk-vijay-tvk-vijay-released-election-promises-for-farmers

பயிர் கடன், கல்வி

5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் 50 சதவீதம் ரத்து செய்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். திமுக மாதிரி எல்லோருக்கும் என சொல்லி பிறகு அதில் தகுதி வைத்து ஏமாற்ற மாட்டேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்வேன் [TVK Vijay].

2 ஏக்கர் வரை நிலம் உள்ள மற்றும் நிலம் இல்லாத விவசாயிகள் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இல்லாத நிலையில் அவர்களின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். விவசாயிகளின் எதிராக எந்த திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் நெருக்கடியே இருந்தாலும் நம் தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும்.

ரேஷன் கடைகள்

எப்போதும் விவசாயிகளின் பக்கமே தவெக ஆட்சி நிற்கும். கொள்முதல் நிலையங்களில் நெல் உரிய முறையில் பாதுகாக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி இறக்குவதற்கோ ஒரு மூட்டை கமிஷன் கூட வாங்காமல் பார்த்துக் கொள்வோம். கமிஷன் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையரை நிர்ணயிக்கப்படும். கிராமங்களில் எடையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் முறை பின்பற்றப்படும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்றவை பாக்கெட் செய்து விற்கப்படும்.

அடிப்படை வசதிகள்

மீனவர்களுக்கு ஒன்றிய அரசு சட்டபூர்வமாக பாதுகாப்பளிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு அதற்கான அழுத்தத்தை தவெக கொடுக்கும். கல்வி, மருத்துவம், ரேஷன், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்போம். பெண்கள், குழந்தைகள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.

அரசு வேலை வாய்ப்புடன், தனியார் வேலை வாய்ப்புகளும் அதிகளவு உருவாக்கப்படும். இத்தனை கோடி, அத்தனை கோடி ஒப்பந்தம் என விளம்பரம் செய்து ஏமாற்றாமல் நியாயமாக செயல்படுவோம். அடுத்து நாங்கள் தான் ஆட்சி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்பவர்கள், நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் இல்லாத ஆட்சி என்று நெஞ்சை தொட்டு வாக்குறுதி அளிக்க தயாரா.

நாம் இன்றைக்கு இல்லை, ஆட்சிக்கு வந்த பிறகும் தில்லாக அதை சொல்வோம். ஊழல் லஞ்சம் இல்லாத ஆட்சியை வழங்க முயற்சி செய்தாலே போதும். எல்லாம் தன்னாலே நடந்துவிடும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+