தஞ்சாவூரில் சிலிர்ப்பு.. தமிழில் வேத மந்திரம் ஓதி பெண்கள் கும்பாபிஷேகம்.. முதல்முறையாக தஞ்சையில்..!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாளைய தினம் நடக்க போகும் கும்பாபிஷேகம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. என்ன காரணம் தெரியுமா?
இயற்கையாக வரும் மாதவிடாயை காரணம் காட்டி, பெண்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன... முக்கியமாக, கருவறைக்குள் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நுழைய முடியும் என்ற நிலையை பெரியார் மிகக்கடுமையாக எதிர்த்தார்.

அவர் வழிவந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நிறைவேற்றினார். சட்டம் இயற்றினாலும் அது நிறைவேற்ற முடியாமல் போன நிலையில், அந்த சட்டத்திற்கு உயிர் ஊட்டினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்...
அர்ச்சகர்கள்: அந்தவகையில், கடந்த 2021ல், பெண் ஓதுவார் முதன் முறையாக கோவிலில் நியமனம் செய்யப்பட்டார். 2022-ல் 3 பெண் அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர்..
கடந்த வருடமும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. தற்போது பெண் அர்ச்சகர்களும் அச்சரம் பிசகாமல் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். கருவறைக்குள் சென்று மந்திரங்களையும், திருப்பாவையும் பாட ஆரம்பித்துவிட்டனர்..
கும்பாபிஷேகம்: இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம், தஞ்சை அருகே நாளைய தினம் நடக்கிறது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பாக, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவாலைக்குமாரி, பதினெண் சித்தர்கள், மூட்டை சுவாமிகள் அருள்கூட கும்பாபிஷேகம் நாளை தினம் அதாவது 6ம் தேதி காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது.
வேத மந்திரங்கள்: இந்த நிகழ்வுக்கு ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் முன்னிலை வகிக்கிறார். இதற்கான கால யாகசாலை பூஜையில் தமிழ் வேத மந்திரங்களை பெண்களே நேற்றைய தினம் ஓதி நடத்தினர்.. தொடர்ந்து நாளைய தினம் நான்கு கால யாகசாலை பூஜைகளிலும் பெண்களே தமிழ் மந்திரங்கள் ஓத போகிறார்கள்..
மேலும், நாளை நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தையும் தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே நடத்துகின்றனர். அப்போது பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று, அவர்களது திருக்கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். உழவுத் தொழிலின் குறியீடாக இந்த பச்சை சேலையை பெண்கள் உடுத்துகிறார்கள்..
எதிர்பார்ப்பு: சித்தர் முறைப்படியும், சித்தர் மரபுபடியும் இக்குடமுழுக்கு நடைபெற உள்ளது... இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம் என்பதால், அனைவரது கவனத்தையும் தஞ்சாவூர் பெற்று வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications