தஞ்சையிலிருந்து பிரிக்கப்படுமா கும்பகோணம்? 18 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஏப்ரல் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சி பிரமுகர்கள் சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரை பிரித்து திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் உருவாகின.
2 ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு நாகையிலிருந்து பிரித்து மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கப்பட்டது.

எடப்பாடி ஆட்சியில் புதிய மாவட்டங்கள்
அத்துடன் நெல்லையிலிருந்து பிரித்து தென்காசி என்ற தனி மாவட்டமும், வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு என்ற தனி மாவட்டமும், விழுப்புரத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி என்ற தனி மாவட்டமும் உருவாக்கப்பட்டது.

கும்பகோணம் தனி மாவட்டக் கோரிக்கை
அதே நேரத்தில் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக அங்குள்ள 2 பெரிய நகரங்களாக கும்பகோணமும், பட்டுக்கோட்டையும் உள்ளன. இதில் கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதேபோல் பட்டுக்கோட்டையையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம்
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நகராட்சியாக இருந்த கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தேர்தலையும் நடத்தி முடித்துவிட்டது. இதற்கிடையே தங்கள் நீண்டநாள் விருப்பமான கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்
இதற்காக "கும்பகோணம் மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழு" என்ற பெயரில் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போராட்டக்குழுத் தலைவராக வன்னியர் சங்க தலைவர்
இந்த போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர் தி.ஜோதிராஜ், அமமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளார் பொன்.த.மனோகரன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் அய்யப்பன், தேமுதிக மாவட்ட செயலாளர் கோ.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!











Click it and Unblock the Notifications