சாம்பார் கரண்டியால் காவலரை தாக்கி! காலில் சட்டையை கிழித்து கட்டி.. தேனி கைதிகள் தப்பியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி என்பது குறித்தும் அவர்கள் தப்பிக்க மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்தும் அந்த 17 பேர் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா விளக்கமளித்துள்ளார்.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 சிறை கைதிகள் கடந்த 26-ஆம் தேதி இரவு தப்பி ஓடிய நிலையில் 17 கைதிகளையும் போலீசார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

Andipatti DSP Vishnupriya

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து க.விளக்கு காவல் நிலையத்தில் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 17 சிறை கைதிகள் தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிவிட்டதாக சிறைத் துறையில் இருந்து காவல்துறைக்கு தகவல் வந்ததும் உடனடியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை தீவிரபடுத்தினோம்.

முதல் 24 மணி நேரத்தில் 13 சிறை கைதிகளை கைது செய்துள்ளோம். அடுத்த 12 மணி நேரத்தில் 4 கைதிகளை கைது செய்தோம். தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் லிங்க பிரசாத் மீது 3 குண்டாஸ் வழக்குகளும், கருப்பசாமி, ராஜ்குமார், தருண் குமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் மீது ஒரு குண்டாஸ் வழக்குகள் மற்றும் மற்ற 12 சிறைக் கைதிகள் மீது திருட்டு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

சிறையில் இருந்து தப்பிப்பதற்காக லிங்க பிரசாத் என்ற சிறைக் கைதிதான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏன் சிறையில் இருந்து தப்பித்தார் என்று விசாரித்த போது பிணையில் இருந்து வெளியே வர முடியாதபடி அவர் மீது வழக்குகள் இருந்துள்ளது.

மேலும் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால் இனிமேல் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்ற நிலையில்தான் சிறையில் இருந்து தப்பிப்பதற்கு திட்டமிட்டு உள்ளார்.

கைது செய்யப்பட்ட 17 சிறை கைதிகளையும் பாளையங்கோட்டை, கோயமுத்தூர், கடலூர், சேலம் உள்ளிட்ட சிறையில் பிரித்துப் பிரித்து அடைத்துள்ளோம்.

சிறையில் இருந்து கைதிகளை தப்பியதாக தகவல் வந்த நிலையில் முதல் குற்றவாளியை சிறிது நேரத்திற்குள் கைது செய்தோம், தொடர்ந்து மலைகளில் பதுங்கி இருந்த கைதிகளை தேடுவதில் சவால்கள் நிறைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 17 தனிப்படைகள் அமைத்து சிறைக் கைதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினோம். தேக்கம்பட்டி சிறை வளாகம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

கிராமத்திற்குள் புதிதாக யாரேனும் வந்தால் ஏதேனும் உதவிகள் கேட்டால் கிராம மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சிறை கைதிகளைப் பிடிக்க கிராம மக்களும் எங்களுக்கு உதவி புரிந்தனர்.

மலைப் பகுதிகளில் பதுங்கி இருந்த 12 சிறைக் கைதிகளை ட்ரோன் மூலம் பறக்கவிட்டு அவர்களை கண்டறிந்து கைது செய்தோம். மேலும் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை செய்ததால் கைதிகள் யாரும் மாவட்ட எல்லையை கடந்து செல்லவில்லை என்பதை உறுதி செய்தோம்.

கூடலூர் அருகில் உள்ள கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்ற சகோதரர்களான இரண்டு பேரை (மீனாட்சி சுந்தரம், திருப்பதி) கூடலூர் புறவழிச்சாலை அருகே கைது செய்தோம். சிறையிலிருந்து தப்பி சென்ற 17 கைதிகளில் 1 சிலரை தவிர மற்ற அனைவருக்கும் ஒருவருக்கு ஒருவருக்கு எந்த தொடர்பும் இல்லை.

கொலை செய்வதற்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு சிறையில் இருந்து தப்பியதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்திகளே! முறையான விசாரணை செய்த பின்பு தான் அனைத்தும் தெரியவரும். லிங்க பிரசாத் மேல் 26 வழக்குகள் உள்ளன. 3 குண்டாஸ் உள்ளன.

ரயில் தண்டவாளம் வழியாக கைதிகள் தப்பிச் செல்ல வாய்ப்பு இருந்ததால் தண்டவாளம் வழியாகவே நடந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினோம். சிறைக்கைதிகள் யாரேனும் மக்களை தொடர்பு கொள்ள முயன்றபோது எங்களுக்கு உடனடியாக தகவல் கிடைத்துள்ளது.

மக்களுக்கு ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்ததால் ஊரில் யாரேனும் புதிதாக வந்தால் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிறையில் இருந்த சமையல் கரண்டியை வைத்து சிறை காவலர்களை தாக்கி விட்டு அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காலில் செருப்புகள் இல்லாமல் தப்பிச் சென்ற நிலையில் கரடு முரடான மலையில் ஏறிய போது காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கைதிகள் அணிந்திருந்த சட்டையைக் கிழித்து காலில் வைத்து கட்டி மலை ஏறி நடந்து சென்றுள்ளனர்.

தங்களது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கைதிகள் தப்பி ஓடிய 36 மணி நேரத்தில், 17 கைதிகளையும் பிடித்து சிறையில் அடைத்துள்ளோம் என தெரிவித்தார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+