• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 லட்சம் கோடி ஊழல்! ஆதினத்தை தொட்டால் திமுகவில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்! எச்.ராஜா பரபர பேச்சு!

Google Oneindia Tamil News

தேனி : தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மேல் ஊழல் நடந்துள்ளது எனவும் திமுக அரசின் வேதனைகளை மக்கள் எடுத்த கூற வேண்டுமென பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச் ராஜா கூறியுள்ளார்.

Recommended Video

  பிரதமர்கிட்ட ஏன் ஒப்பாரி வைக்கிறீங்க.. - திமுக அரசை புரட்டி எடுத்த எச்.ராஜா!

  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அவரது தலைமையிலான ஆட்சி எட்டு ஆண்டுகளை கடந்து உள்ளது.இதை அடுத்து இந்தியா முழுவதும் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

  தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்ச ராஜா கலந்து கொண்டு பேசினார்.

  கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும்... திமுக அரசுக்கு எச் ராஜா கடும் எச்சரிக்கை கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும்... திமுக அரசுக்கு எச் ராஜா கடும் எச்சரிக்கை

  எச்.ராஜா பேச்சு

  எச்.ராஜா பேச்சு

  நிகழ்ச்சியில் பேசிய அவர்,"தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை அடித்த கொள்ளை 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். 2 ஜி அலைக்கற்றை ஊழல் எல்லாம் அருகில் நிற்க முடியாது. மதுரையில் மாநாடு நடந்தது. மதுரை ஆதீனம் பற்றுள்ள நல்ல மனிதர். அவரை மிரட்டுகிறார்கள். ஆழ்வார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் உருவாக்கப்பட்ட பீடாதிபதியை மிரட்டுவீர்களா. அவரைத் தொட்டால் திமுகவில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். எல்லோரும் பிஜேபிக்கு வந்துவிடுவார்கள். கோவில்களில் இருந்து அரசை விரட்டியடிக்க ஆதீனம் தலைமையில் ஒன்று சேர்வோம்.

  திமுக அரசு

  திமுக அரசு

  இன்று தமிழகத்தில் இருக்கும் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. செய்ய முடியாது.அதற்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை இருக்கிறது அதை சொன்னால் அதை சர்ச்சை என்பீர்கள். ஒருவனால் ஒன்றுமே முடியாது என்றால் அதற்கு ஒரு பெயர் உண்டு. தமிழக மக்கள் வீதியில் வந்து நின்று திராவிட முன்னேற்றக் கழக அரசை தூக்கி எறிவார்கள. அந்த நிலை விரைவில் வரும். தமிழை வளர்க்க நமக்கு திமுக தேவை இல்லை. தமிழ் விரோத கட்சி அது. நமது தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன ஈவேராவின் வழிவந்த கூட்டத்தை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டும்.

  நீட் தேர்வு

  நீட் தேர்வு

  பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் என்ன பேசுவது என்றே தமிழக முதல்வருக்கு தெரியவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது திமுகதான். 2010ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரஸ் ஆண்ட போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது. அப்போது மோடி சர்க்காரா ஆட்சியில் இருந்தது? அப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அப்போது கேட்டிருக்க வேண்டாமா மந்திரி சபையை விட்டு வெளியே வந்திருக்க வேண்டாமா?

  தமிழக முதல்வர்

  தமிழக முதல்வர்

  நீட் தேர்வு அமலுக்கு வந்ததற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணம். உண்மையிலேயே தமிழக முதல்வருக்கு நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர் நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீட் வேண்டும் என்று வாதம் செய்தது சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம். நளினி சிதம்பரம் வீட்டிற்கு முன் சென்று முதல்வர் எதிர்ப்பை தெரிவிக்கலாம். அதில் நியாயம் உண்டு. அதை விட்டுவிட்டு தமிழக முதல்வர் பிரதமர் மேடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்

  தமிழக விரோதி

  தமிழக விரோதி

  திமுகவிற்கு ஒரு பழக்கம் உண்டு. நடக்கப் போற விஷயத்தை முன்னாடியே சொல்லி வைத்து விடுவார்கள். என்றால் அதை நாங்கள் சொன்னதால் தான் நடந்தது என்று கூறுவதற்காக. அதுதான் கச்சத்தீவு குறித்த முதல்வரின் பேச்சும். திமுக தமிழ் விரோதி தமிழன் விரோதி தமிழக விரோதி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 2031 இல் தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். செல்லுங்கள் திருப்பூர் கோயம்புத்தூருக்கு தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள்?" என பேசினார்.

  English summary
  H Raja, a senior BJP leader and a member of the National Executive Committee, has said that more than Rs 10 lakh crore worth of corruption has taken place in Hindu temples in Tamil Nadu and that the people should take the pains of the DMK government.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X