Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் குரு-சிஷ்யன் மோதல்? டிடிவி தினகரனுக்கு எதிராக தங்கத்தமிழ் செல்வன்.. களநிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் தங்கத்தமிழ் செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.. இந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக டிடிவி தினகரன் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குரு சிஷ்யன் மோதலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுகவை வீழ்த்தவே முடியாத ஊர்களில் ஒன்று தேனி மாவட்டம்.. கட்சியில் ஏற்பட்ட மிகவும் நெருக்கடியான சூழல்நிலைகளில் மட்டுமே அதிமுக இங்கு தோற்றுள்ளது.. கோவை எப்படி அதிமுகவின் கோட்டையோ அதேபோல் தேனி மாவட்டமும் அதிமுகவின் கோட்டையாக உள்ளது.

guru sishyan conflict in Theni TTV Dhinakaran vs thanga tamil selvan What is the field

1996ம் ஆண்டு தான் கடைசியாக தேனியில் நேரடியாக போட்டியிட்டு திமுக வென்றுள்ளது. அப்படியிருந்தும் தேனியை எடுத்துக்கொண்டு, தான் சர்வ சாதாரணமாக வெல்லக்கூடிய திருநெல்வேலியை காங்கிரசுக்கு திமுக கொடுத்திருக்கிறது. தேனியில் திமுகவை வளர்க்க விரும்பும் திமுக, அங்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் செல்வாக்கையும், டிடிவி தினகரனின் செல்வாக்கையும் முற்றிலும் காலி செய்ய விரும்புகிறது. கடந்த முறை தேனி மாவட்டத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போடியில் மட்டுமே அதிமுக வென்றது. மற்ற தொகுதிகளில் திமுகவே வென்றது.

தேனி லோக்சபா தேர்தலில் கடந்த முறை அமமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிட்டு 3வது இடத்தையே பிடித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் இவிகேஎஸ் இளங்கோவன் 2வது இடத்தை பிடித்தார். கடந்த முறை திமுகவே நேரடியாக நின்றிருந்தால் நிச்சயம் வென்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிக்கும் என்கிறது தேனி களநிலவரம்.

இந்த முறை தேனியை திமுக வாங்கி போட்டியிட காரணம், அங்கு வலுவான வேட்பாளராக டிடிவி தினகரன் களம் இறக்கப்படலாம் என்பதுடன் ஓ பன்னீர்செல்வமும் பக்கபலமாக இருப்பார் என்பதால், அவருக்கு சவாலான வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவது திமுகவிற்கு சற்று கடினமானது என்கிறார்கள்.. அதனால் தான் துணிந்து காங்கிரஸ் கட்சிக்கு பதில் திமுக களம் இறங்கி உள்ளது. வலுவான வேட்பாளராக தங்கத்தமிழ் செல்வனை களம் இறக்கி உள்ளது. தங்கத்தமிழ்செல்வன் யார் என்றால், ஒரு காலத்தில் டிடிவி தினகரனை குருவாக ஏற்றுக்கொண்டு அமமுகவின் முக்கிய தலைவராக இருந்த அவரது சிஷ்யர் ஆவார்.. இதனால் அங்கு குரு சிஷ்யன் மோதல் போல் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரம் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும் இந்த தொகுதியில் களம் இறங்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் இந்த முறை அவர் போட்டியிட்டால், கடும் சவாலை சந்திப்பார் என்றே சொல்கிறார்கள்.. திமுகவை பொறுத்தவரை இந்த முறை எல்லா தொகுதியிலும் வெல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது. கூட்டணி கட்சிகள் கூட ஒரு தொகுதியில் கூட தோல்வியை சந்தித்துவிடக்கூடாது என்பதிலும் திமுக உறுதியாக உள்ளது. அதனால் தான் இந்த முறை தைரியமாக தேனியையும் கோவையையும் வாங்கி உள்ளது .

அதிமுக சார்பில் தேனி தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுகிறார். டிடிவி தினகரன், நாராயணசாமி, என ஓட்டுக்கள் பிரிந்தால் கண்டிப்பாக திமுகவின் தங்கத்தமிழ்செல்வன் ஜெயிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக திமுக தலைமை நம்புகிறது.. இதன் காரணமாகவே போட்டியில் தங்கத்தை களம் இறக்கி உள்ளது. அதுமட்டுமின்றி டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் பற்றி நன்றாகவே தங்கத்திற்கு நன்றாகவே தெரியும் என்பது கூடுதல் பலம் ஆகும்.

தேனி தொகுதி வரலாறு என்ன: கடைசியாக தேனியில் திமுக 1996 ல் வெற்றி பெற்றது. பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே தேனியை திமுக கொடுத்துவிடும். தேனி லோக்சபா தொகுதி, பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. தேனி மாவட்டம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நேரடியாக போட்டியிட்ட தொகுதிகளை கொண்ட தொகுதி என்பதால், இயற்கையாகவே இங்கு அதிமுகவே எப்போதும் வெற்றி பெறும்..

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தான் இங்கு போட்டியிடும். காங்கிரஸ் சார்பில் ஜேஎம் ஆரூண் இங்கு இரண்டு முறை வெற்றி பெற்றார். இங்கு கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் கணிசமாக இஸ்லாமியர்கள் வாக்குகள் இருக்கிறது. தேனி தொகுதியில் தேவர் சமூகம், நாயுடு, செட்டியார், தலித், பிள்ளைமார் போன்ற சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இங்கு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தேவர் சமூகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் டிடிவி தினகரனுக்கு போட்டியிடும் வாய்ப்பு உள்ளதால் தங்கத்தமிழ்செல்வனை திமுக இங்கு நிறுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+