Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரசுக்கு ஒதுக்கிய தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக வெற்றி.. கூட்டணி தலைவர்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

தேனி: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக இன்று தேர்வானார். காங்கிரசுக்கு இந்த நகராட்சி ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தனித்து கைப்பற்றியுள்ளது.

ஆனாலும் திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர்கள் பதவிகளை ஒதுக்கியது.

 கூட்டணி தர்மம் மீறல்

கூட்டணி தர்மம் மீறல்

இவ்வாறு ஒதுக்கினாலும் கூட இன்று நடந்த மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலில் கூட்டணி தர்மம் பல இடங்களில் மீறப்பட்டுள்ளது. அந்த வகையில் தேனி அல்லிநகரம் நகராட்சியிலும் கூட்டணி தர்மம் மீறப்பட்டது. தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர் தலைவராகி உள்ளார். அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

 தேனி நகராட்சி

தேனி நகராட்சி

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. பிப்ரவரி 9 ல் நடந்த தேர்தலில் திமுக 19, அதிமுக 7, காங்கிரஸ், அமமுக தலா 2, பாஜக ஒரு வார்டுகளில் வென்றன. 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இதனால் திமுக தனிபெரும்பான்மையுடன் இந்த நகராட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

 காங்கிரசுக்கு ஒதுக்கீடு

காங்கிரசுக்கு ஒதுக்கீடு

ஆனால் எதிர்பாராதவிதமாக தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. 22வது வார்டில் வெற்றி பெற்ற சற்குணம் என்பவர் நகராட்சி தலைவராக வேட்புமனு செய்ய இருந்தார். இது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 19 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், 2 கவுன்சிலர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவியை விட்டு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை.

 திமுக வெற்றி

திமுக வெற்றி

இதனால் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் சற்குணத்திடம் திமுக தரப்பு பேசியது. அவர் உடன்படவில்லை. நகராட்சி தலைவர் பதவியை பிடிப்பதில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான மனுத்தாக்கல் நடந்தது. திமுக சார்பில் 10வது வார்டில் வெற்றி பெற்ற ரேணுப்பிரியா மனுத்தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளரான சற்குணம் வேட்புமனுவும் செய்யவில்லை. இதனால் திமுகவின் ரேணுப்பிரியா நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

 சாலையில் தர்ணா

சாலையில் தர்ணா

இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நகராட்சி அலுவலகத்தின் முன்புள்ள பெரியகுளம் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். கூட்டணி தர்மம் மீறப்பட்டதாக திமுகவின் கட்சி மேலிடத்திடம் புகார் செய்யப்பட்டது. இதனால் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் இன்று களேபரமாக இருந்தது.

 யார் இந்த ரேணுப்பிரியா

யார் இந்த ரேணுப்பிரியா

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேணுப்பிரியாவின் கணவர் பெயர் பாலமுருகன். திமுகவின் தேனி நகர பொறுப்பாளராக உள்ள இவர் நகராட்சி 20வது வார்டு கவுன்சிலராகவும் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக முயற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால் நகராட்சி தலைவர் பதவி பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவியை நகராட்சி தலைவராக்க முடிவு செய்தார். இதனால் ரேணுப்பிரியா தான் வசித்து வந்த வடப்புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்து நகராட்சி தேர்தலில் 10வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நகராட்சி தலைவராகவும் மாறியுள்ளார்.

 முதல்முறையாக திமுக

முதல்முறையாக திமுக

இந்த நகராட்சியில் 1996ல் சுயேச்சை, 2001ல் அதிமுக, 2006ல் காங்கிரஸ், 2011ல் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்தனர். இதில் 2006ல் தலைவராக இருந்த காங்கிரஸ் முனியாண்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் பதவியை இழந்தார். இதையடுத்து பொறுப்பு தலைவராக அப்போதைய திமுக நகராட்சி துணை தலைவர் இலகேஸ்வரன் 8 மாதம் செயல்பட்டார். அதன்பின் இந்நாள் வரை தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக சார்பில் நிரந்தர தலைவர் இருந்தது இல்லை. இந்நிலையில் தான் வரலாறு மாறி திமுகவில் நகராட்சி தலைவர் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+