கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி எதிர்பார்ப்பு.. தங்க நகைகளை அடகு வைக்க ஆர்வம்.. எதிர்பார்க்காத டவிஸ்ட்
தேனி: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பலர், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் விவசாய பயிர்க்கடன் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டசபை தேர்தல் வருகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கும் போது எல்லாம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இப்போதும் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பொதுவாகவே கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. பேரில், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவை தங்க நகைகளின் பெயரில் கடனுதவி வழங்கி வருகிறன்றன. விவசாய கடன் பெறும் விவசாயிகள், அதை ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்திவிட்டால் வட்டி மானியம் வழங்கப்படுவதும் வழக்கம் ஆகும்.
இந்த ஒரு காரணத்திற்காகவே, கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால் பொதுமக்கள் பலருமே விவசாய கடன் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனெனில் அடுத்த ஆண்டு (2026) தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளதால், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக உள்ளது. கடந்த காலங்களை போன்று இந்த முறையும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் உள்ளது.
இதனால், கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற பலரும் ஆர்வம் காட்டினர். கடந்த சில மாதங்களாக கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்தநிலையில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாய பயிர்க்கடன் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக விவசாயிகள் கடன் பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, "வருகிற தேர்தலில் கூட்டுறவு கடன் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் வேறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளையும் திருப்பி கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்திருக்கிறார்கள். இதனால் விவசாயிகள் தற்போது கடன் பெற முடியாத நிலைமை ஏற்பட்டிருககிறது.. கூட்டுறவு வங்கிகளில் சென்று கேட்டால் கடன் இலக்கு எட்டப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். எனவே, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பயிர்க்கடன் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட அளவு கடன் வழங்க இலக்கு ஒதுக்கப்பட்டது. அந்த இலக்கு எட்டப்பட்டிருககிறது. அதற்கு மேல் கடனுதவி வழங்கினால் மத்திய, மாநில அரசு வழங்கும் வட்டி மானியம் பெற முடியாது. எனவே, கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அரசு உத்தரவு வந்தவுடன் விவசாயிகளுக்கு தடையின்றி கடன் வழங்கப்படும் என்று கூறினார்கள்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications