தேனி: 'இப்படிதான் சமைக்கணும்'... செம டேஸ்ட்... அம்மா உணவகத்தில் சாப்பிட்ட திமுக எம்.எல்.ஏ!
தேனி: அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்த பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணக்குமார், இப்படிதான் சமைக்கணும்'. செம்ம டேஸ்டா இருக்கு என்று பாராட்டி உள்ளார்.
Recommended Video
முன்னதாக தேனியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் ராஜ வாய்க்காலை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் திடீரென ஆய்வு செய்தார். தேனி நகர் பகுதியில் செல்லக்கூடியது ராஜவாய்க்கால். நகரில் செல்லக்கூடிய கொட்டகுடி ஆற்றில் இருந்து வரும் ராஜ வாக்கால் தேனி பழைய பேருந்து நிலையம் அடிப்பகுதியில் சுரங்கம் வழியாக சென்று பங்களாமேடு பகுதி வழியாக சென்று தாமரைக்குளத்தை சென்றடைகிறது.

ராஜவாக்கால் செல்லும் வழி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ராஜ வாக்கால் செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தார்.
ராஜ வாக்கால் துவங்கும் இடம் மற்றும் வாய்க்கால் செல்லும் பழைய பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் , வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வுக்கு பிறகு பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உணவகத்தில் உணவருந்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த பணியாளர்களிடம் உணவு நன்றாக இருப்பதாக பாராட்டினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications