திருமணத்துக்கு பிளக்ஸ் வைப்பதில் மோதல்- கம்பம் அருகே 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே, நாராயண தேவன் பட்டி ஊராட்சியில், அதிகாலையில் ஆறு இடங்களில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயண தேவன் பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி தெருவில், இன்று அதிகாலையில் ஆறு இடங்களில் தொடர்ந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த சத்தத்தால், தூக்கம் கலைந்த அப்பகுதி மக்கள், வெளியே வந்து பார்த்த போது, சிலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வெடி சத்தத்தின் அதிர்வலைகளால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளும், இருசக்கர வாகன விளக்குகளும் உடைந்துள்ளன. பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பொதுமக்களும், குழந்தைகளும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவம் நடைபெற்ற பகுதியில், வெடித்த பாகங்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவை நாட்டு வெடிகுண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. 6 இடங்களில் கல்குவாரிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண விழாவில் இரு குழு இளைஞர்களுக்குள் பிளக்ஸ் போர்டு வைப்பதில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் 6 இடங்களில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற சம்பவம், நாராயண தேவன்பட்டி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications