தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் வீட்டின் பூட்டை உடைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. பின்னணி என்ன?
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக ஏகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தது.. இதையடுத்து சொந்த ஊரான திருவள்ளூரில் அவருடைய வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அதேபோல் தேனிபொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் பூட்டை உடைத்து சோதனை நடந்தது.
அரசு ஊழியர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தால், அந்த புகார் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புபோலீசார் விசாரணையை தொடங்குவார்கள். முதலில் நேரடியாக விசாரணக்கு பதில், புகாரின் உண்மை தன்மையை பரிசோதிப்பார்கள். போதிய முகாந்திரம் இருக்கிறதா அல்லது பழிவாங்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட புகாரா என்பதை விசாரிப்பார்கள்..

அரசு ஊழியர் மீது புகார்
போதிய முகாந்திரம் இருக்கிறது என்பதும், அவர் அதிகப்படியான சொத்து சேர்த்திருப்பது உண்மை என்பதும் தெரியவந்தால், அதனை உறுதி செய்வதற்கும், போதிய ஆதாரங்களை திரட்டுவதற்கும், அரசு ஊழியரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவார்கள். அந்த சோதனையில் லஞ்சத்தில் சொத்து சேர்த்தது உறுதியானால் கைது செய்வார்கள். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள். அதன்பின்னர் அந்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெறும்.
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர்
இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக உள்ள ஏகராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏகராஜ் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணியாற்றுகிறார். அவர், தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகராட்சி அலுவலர் குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில் வசித்து வருகிறார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்களை சிலர் அனுப்பியுள்ளார்கள். அதன் பேரில் திருவள்ளூரில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.
தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ்
அதுபோல், பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகராட்சி அலுவலர் குடியிருப்பில் ஏகராஜ் வசிக்கும் வீட்டுக்கு சோதனை நடத்த நேற்று காலை 8 மணியளவில் தேனி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்த வந்தனர். அப்போது வீடு பூட்டி இருந்தது. ஆணையர் ஏகராஜ் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். சாவியை அவர் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications