திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நெல்லையில் பரபர போஸ்டர்

Google Oneindia Tamil News

நெல்லை: ஓ பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப் போனோம் இனிமேலும் தொடர்ந்தால் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் நெல்லையில் தலைமைக்கு எதிராக அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட வால் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நெல்லையில் பரபர போஸ்டர்

    சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக இந்த அளவிற்கு தோற்பதற்கு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும் , டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், சென்னை மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியமான காரணமாகும்.

    3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. விரைவில் வாக்குமூலம்.. போலீஸ் தீவிரம்3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. விரைவில் வாக்குமூலம்.. போலீஸ் தீவிரம்

    வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவினர் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.
    கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் ஓரளவிற்கு அதிமுக வெற்றி பெற்றது. தென்மாவட்டங்களில் தோற்றுப் போனதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தோற்றுப் போனதற்கு இட ஒதுக்கீடு முக்கியமான காரணம் என்று அவர்களுக்கு விமர்சனங்கள் உள்ளன.

    அதிமுக எம்எல்ஏக்கள்

    அதிமுக எம்எல்ஏக்கள்

    இந்த நிலையில் அன்மையில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவே காரணம் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் நிச்சயமாக தென்மாவட்டங்களில் அதிமுக இந்த அளவிற்கு தோல்வியை தழுவி இருக்காது என்று அவர் கூறியதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளியானது..

    இருவரும் சந்திப்பு

    இருவரும் சந்திப்பு

    எதிர்க்கட்சி தலைவர் தேர்வின் போது ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆகியோரிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. அப்போது அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை.. சசிகலா ஆடியோ ரிலீஸ் ஆன பிறகே இருவரும் சந்தித்து பேசினர்.

    தேர்தல் தோல்வி

    தேர்தல் தோல்வி

    இந்நிலையில் நெல்லை வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதியில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் அதிமுக கட்சி செயல்பாடுகளில் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப் போனோம்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இனிமேலும் தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் திருநெல்வேலி மாவட்டம் என்று வால் போஸ்டரில் போடப்பட்டிருந்தது. ஒரு பக்கம் சசிகலா ஆடியோ ரிலீஸ், மறுபக்கம் ஓபிஎஸ் ஆதவாளர்கள் போஸ்டர் என இரு பக்கமும் எடப்பாடி பழனிசாமி சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

    English summary
    O paneerselvam supporters poster on Nellai: We lost the election because we decided not to consult O Panneerselvam. If we continue, we will besiege the AIADMK leadership.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X