குடும்பத் தகராறு.. மகள், மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்.. நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லையில் குடும்பத் தகராறு காரணமாக மகள், மருமகனை மாமனார் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சீதபற்பநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துபாண்டி தேவர். இவருடைய மகன் சிறுத்தை என்ற செல்வம். இவருடைய மனைவி உச்சிமாகாளி என்ற மஞ்சு.
இவர்களுக்கு மணிகண்டன் (8), முகேஷ் (4). புவனேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மஞ்சுவின் கணவர் செல்வம் பெண் கட்டிய தனது மாமனார் ஊரான நந்தன்தட்டை கிராமத்திலேயே தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.

சூழ்நிலை
இந்நிலையில் சிறுத்தை செல்வத்தின் குடும்ப சூழ்நிலையை கருதி அவரது மனைவி மஞ்சுவின் தந்தையான நந்தன்தட்டை கிராமத்தைச் சேர்ந்த புலேந்திரன்(60), மஞ்சுவின் மூன்று குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இதற்கிடையே குடும்ப சூழ்நிலையின் காரணமாக புலேந்திரனுக்கும் சிறுத்தை செல்வத்திற்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

மாமனார்
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் புலேந்திரன் வழக்கம்போல் தனது பேரக்குழந்தைகளை கொஞ்சி விளையாடி உள்ளார். இதை அறிந்து மாமனார் மீது கோபம் கொண்டிருந்த சிறுத்தை செல்வம் தனது குழந்தைகளை தொடக்கூடாது என மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சமாதானம்
இதை அறிந்த மஞ்சு இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரமடைந்த புலேந்திரன் தனது வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மருமகன் என்று கூட பாராமல் சரமாரியாக வெட்டினார்.

விசாரணை
இதை தடுக்க முற்பட்ட மஞ்சுவின் மீதும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் நிலை தடுமாறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாப்பாகுடி காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேற்படி இரு சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications