உதயநிதி சொல்லியும் கேட்கவில்லை.. நெல்லை திமுக அன்பு தொல்லை.. அமைச்சர் பதவிக்காக அதிரடி தீர்மானம்
நெல்லை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நெல்லை மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி நேற்றிரவு தான் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் நீங்கல் சொல்றதை சொல்லுங்க, நாங்கள் செய்றதை செய்வோம் என்கிற வகையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரக்கோரி நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

பிள்ளையார் சுழி
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பிள்ளையார் சுழி போட்டு வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர், திண்டுக்கல் என வரிசையாக அடுத்தடுத்த மாவட்டங்களில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூத்த அமைச்சர்
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு தலைமை வகித்தவரே மூத்த அமைச்சரும், திமுக துணைப் பொதுசெயலாளருமான ஐ.பெரியசாமி தான். இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து தன்னடக்கமான அறிக்கை ஒன்று வெளியானது.

அன்பு நெருக்கடி
அதில் தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என இனியும் திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். உதயநிதி அவ்வளவு தூரம் கேட்டுக்கொண்ட பிறகு, நெல்லை மத்திய மாவட்ட திமுக தலைமைக்கு அன்பு நெருக்கடி கொடுத்துள்ளது. அதாவது உதயநிதியை அமைச்சரவையில் இணைக்க வேண்டும் என அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

தொடரும் நிகழ்வு
உதயநிதி சொல்லிவிட்டார் என்பதற்காக யாரும் அமைதியாக இருக்கமாட்டார்கள் என்பதையே இது போன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. இனியும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்கக் கோரி திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை இதை ஒரு அன்பு நெருக்கடியாகவே தலைமை கருதுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications