நெல்லையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன? காவல் துறை பரபரப்பு விளக்கம்
நெல்லை: திருநெல்வேலியில் (நெல்லை) 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போலீஸாரை அரிவாளால் வெட்ட 17 வயது சிறுவன் முயற்சித்த போது தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் அந்த பகுதியில் இருந்த ஒரு தாயும், அவரது மகனும் எந்த காயமும் இன்றி காப்பாற்றப்பட்டனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் மீது கொலை முயற்சி, இளைஞரை காப்பாற்ற சென்ற காவல் அலுவலரை கொலை செய்ய முயற்சித்த போது. தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டு பெண் உட்பட அவரது மகன் உயிர் காப்பாற்றப்பட்டது.!

திருநெல்வேலி பாப்பாக்குடி காலனி சமத்துவபுரத்தை பூர்வீகமாக கொண்ட, சண்முகசுந்தரம் என்பவரது மகன் சக்திகுமார் (22). தற்போது ரஸ்தாவூர் ஊரில் குடியிருந்து வருகிறார். பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறார்கள், சக்தி குமாரை வரவைத்து சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
மேலும் நாங்கள் செய்யும் ரவுடித்தனத்தை வெளியில் மற்றும் போலீஸ்க்கு எப்படி தெரிவிக்கலாம் என்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் சென்றுள்ளனர்.
இளம் சிறார்களை பிடிக்கும் முயற்சி செய்தபோது இரண்டு சிறார்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறை ரஞ்சித் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற உதவி காவல் ஆய்வாளர் முருகனையும், அந்த இரு சிறுவர்களும் சேர்ந்து வெட்ட முயற்சி செய்து உள்ளார்கள்.
தற்காத்துக் கொள்வதற்காக சம்பவ இடத்தின் அருகே இருந்த வீட்டிற்குள் காவல் துறையினர் சென்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த சிறுவர்கள் இருவரும் போலீஸார் மீது தாக்குதல் நடத்த கதவை உடைத்துள்ளனர்.
அந்த வீட்டில் ஒரு பெண்ணும் அவருடைய குழந்தையும் இருந்தனர். இதனால் காவலர்கள் அவர்களை பாதுகாக்க, அந்த சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது போல் சிறுவன் தாக்கியதில் காயமடைந்த சக்திகுமார், காவலர் ரஞ்சித் உள்ளிட்ட மூவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த சிறுவன் மீது பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்
சம்பவத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பாப்பாக்குடி கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications