திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்பி உதயகுமாருக்கு கொலை மிரட்டல்.. ஜாமீனில் வெளிவந்த நபரை மாலை அணிவித்து வரவேற்ற ஓபிஎஸ் தரப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் இன்று ஜாமீனில் வெளி வந்துள்ளார். அவருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பளித்துள்ளனர்.

கடந்த 31ம் தேதி சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வேகமாக பரவியது. அதில் ஆர்.பி.உதயகுமாருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடப்பட்டது.

இதனையடுத்து மகேந்திரவாடி கூட்டுறவு சங்க நிர்வாகியும், அதிமுக இளைஞர் பாசறையின் சங்க தலைவருமான சரவணபாண்டியனை காவல்துறை கைது செய்தது.

“தற்கொலை” செய்ய நினைத்தேன்.. அதிகாரத்திலிருந்து மிரட்டல் - பரபரப்பை கிளப்பிய பிரபல நகைச்சுவை கலைஞர் “தற்கொலை” செய்ய நினைத்தேன்.. அதிகாரத்திலிருந்து மிரட்டல் - பரபரப்பை கிளப்பிய பிரபல நகைச்சுவை கலைஞர்

 கொலை மிரட்டல் ஆடியோ

கொலை மிரட்டல் ஆடியோ

6 நாட்களுக்கு பின்னர் பிணையில் அவர் வெளிவந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்துள்ளனர். ஏற்கெனவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ஈபிஎஸ் தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைப்பேசி ஆடியோ ஒன்று கடந்த 31ம் தேதி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

 பூலித்தேவன் பிறந்தநாள்

பூலித்தேவன் பிறந்தநாள்

அதில், பூலித்தேவன் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வரும் ஆர்.பி.உதயகுமாரை பாடை கட்டி வரவேற்பதாக கூறியிருந்தார். அதாவது ஆண்டு தோறும், செப்டம்பர் 1ம் தேதி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த தினம் கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 1ம் தேதி பூலித்தேவனின் 307வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க இருந்தார்.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இந்நிலையில்தான் சரவணபாண்டியன் உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இந்த ஆடியோவால் அதிமுகவினர் பதற்றமடைந்திருந்தனர். இதனையடுத்து கொக்குகுளம் அதிமுக நிர்வாகி விஜயபாண்டி அய்யாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 1ம் தேதி சரவணபாண்டியனை காவல்துறை கைது செய்தது. தற்போது சரவணபாண்டியன் பிணையில் வெளிவந்துள்ளார். அவருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பளித்துள்ளனர்.

“தற்கொலை செய்துகொள்வேன்”

“தற்கொலை செய்துகொள்வேன்”

முன்னதாக ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அப்படி ஏதாவது நடந்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்" என்று கூறியிருந்தார். ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு தரப்பினரும் ஒன்றிணைய முயாதடி நிலையில் இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ், சிசிகலா உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து கட்சியின் பலத்தை அதிகரிப்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

English summary
An OPS supporter who threatened to kill former minister RB Udayakumar is out on bail today. OPS supporters have given him a warm welcome. On the 31st, an audio went viral on social media. RB Udayakumar was publicly threatened with death. Following this, the police arrested Mahendrawadi Cooperative Society Executive and AIADMK Youth wing Association President Saravanapandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X