Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணைக் கட்டிக்கொண்டு யோக சாதனை - எலைட் வேல்டு ரெக்கார்டில் இடம் பிடித்த மாணவி பிரிஷா

திருநெல்வேலியில் மீனா சங்கர் வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்பிரிஷா 41 உலக சாதனைகள் யோகாசனம் மற்றும் நீச்சலிலும் புரிந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: பிரிஷா என்ற மாணவி யோகாவில் கண்ணைக் கட்டிக்கொண்டு 29 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். எலைட் வேல்டு ( Elite world Record) ரெக்கார்டில் 2021 அவரது சாதனை இடம் பெற்றுள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரிஷா 41 உலக சாதனைகள் யோகாசனம் மற்றும் நீச்சலிலும் புரிந்துள்ளார்.

பிரிஷா உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற பட்டத்தை மத்திய அரசு NCPCR வழங்கியுள்ளது. உலகின் முதல் கௌரவ டாக்டர் என்ற பட்டத்தை நீயூஜெருசலேம் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்து உள்ளது. பிரிஷா உலகின் முதல் அதிக உலக சாதனைகள் புரிந்தவர் என்ற பட்டத்தை குளோபல் பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.

இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் யோகா வகுப்பு எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர் எயிட்ஸ் ஹோம், முதியோர் இல்லம், பார்வையற்ற மாணவர்கள் பள்ளி, புதுச்சேரி, தமிழ்நாடு NCC மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இலவசமாக யோகா வகுப்பு எடுத்து வருகிறார். இவர் தினமும் பள்ளி வகுப்பு முடிந்தவுடன் பார்வையற்ற மாணவர்கள் பள்ளிக்கும் சென்று பார்வையற்றவர்களுக்கு இலவசமாக யோகாசனங்கள் கற்பிக்கிறார்.

Prisha 11 year old girl won several awards and has set records

தன்னுடைய கடினமான தீவிர பயிற்சியின் மூலம் 12 வயது கணேஷ்குமார் என்ற பார்வையற்ற மாணவர்க்கு யோகாசனம் பயிற்றுவித்து முந்தைய சாதனையை முறியடிக்க செய்துள்ளார். யோகாவில் உலகின் முதல் பார்வையற்ற உலக சாதனையாளர் கணேஷ்குமார் ஆவார். இவர் மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

முன்னாள் பாண்டிச்சேரி லெப்டினட் கவர்னர் திருமதி. கிரண்பேடி அவர்கள் பிரிஷாவை "அதிசயத்தக்க, தனித் திறமை உள்ள குழந்தை" என்று பலமுறை பாராட்டி பிரிஷாவின் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரிஷா "யோகா- செய்வோம் இன்பம் பெறுவோம்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் சூரிய நமஸ்காரம், ப்ராணாயாமம், எளிய ஆசனங்கள் மற்றும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா முதலிய நோய்களை தவிர்க்கும் ஆசனங்கள் மற்றும் நோய் வந்த பின் செய்ய வேண்டிய ஆசனங்களை தானே செய்து காட்டிய படங்களுடன் செய்முறைகள் பயன்களை மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை "இந்தியா பிரைம் அவார்டு"க்கு தேர்வு செய்துள்ளனர். நேஷனல் யூத் Festival 2020-21 மத்திய அரசின் யோகா போட்டியின் நடுவராக பங்கேற்றார்.

Prisha 11 year old girl won several awards and has set records

யோகாவில் புதிய சாதனை படைத்துள்ளார் பிரிஷா. திருநெல்வேலியில் ஜூலை 7ஆம் தேதி மாலை கண்களைக் கட்டிக்கொண்டு 29 யோகா ஆசனங்களை செய்துளளார். அவரது சாதனை எலைட் வேல்டு ( Elite world Record )ரெக்கார்டில் புதிய சாதனையாக இடம் பெற்றுள்ளது.

1.கண்களை கட்டிக்கொண்டு கபோடா ஆசனத்தில் அதிவேகமாக ரூபிக்ஸ் க்யூபை சரி செய்வது.

2.கண்களை கட்டிக்கொண்டு வாம தேவ ஆசனத்தில் அதிவேகமாக ப்ரைன் விட்டாவை சரிசெய்வது.

3.கண்களை கட்டிக்கொண்டு விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் ப்ரைன் விட்டாவை அதிவேகமாக சரிசெய்வது.
4. கண்களை கட்டிக் கொண்டு ஐந்து நிமிடங்கள் கையால் அதி வேகமாக சைக்கிள் ஓட்டுவது.

5.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் கண்ட பேருண்ட ஆசனத்தில் கால் கட்டைவிரல் சொடக்கு போடுவது.

6. கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் கண்ட பேருண்ட ஆசனத்தில் கால் கட்டை விரல்,சுண்டு விரலில் பிரைன் ஜிம் செய்வது.

Prisha 11 year old girl won several awards and has set records

7.கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் ஒரு கையால் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஹுல்லா ஹூப்ஸ் சுற்றுவது.

8.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் பந்த சக்கராச னத்தில் கை விரல் இடுக்கில் கத்தியால் குத்துவது.

9.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் கண்ட பேருண்டா சனத்தில் கை கட்டை விரல், சுண்டு விரலில் பிரைன் ஜிம் செய்வது.
10. கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடத்தில் விபரீத சலபாசனத்தில் ஆரஞ்சு பழங்களை கிண்ணத்தில் வைப்பது.

11.கண்களை கட்டிக்கொண்டு ஏகபாத வாமதேவ, வாம ஹஸ்த கண்ட பேருண்டா சனத்தில் அதிவேகமாக பிரைன் விட்டா சரி செய்வது.

12.கண்களை கட்டிக்கொண்டு கப்போடா ஆசனத்தில் அதி வேகமாக Brainvita சரி செய்வது.

13. கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் பந்தை அதிக எண்ணிக்கை தரையில் தட்டுவது.

14.கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் அதிவேகமாக ரூபிக்ஸ் கியூப் சரிசெய்வது.

15.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் வாம தேவ ஆசனத்தில் வேறு நபரின் விரலிடுக்கில் கத்தியால் குத்துவது.

16.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் விபரீத கண்ட பேருண்டா சனத்தில் வேறு நபரின் விரலிடுக்கில் கத்தியால் குத்துவது.

17. கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் நிர்லம்ப பூர்ண சக்ராசனத்தை அதிக எண்ணிக்கைகள் செய்வது.

18.கண்களை கட்டிக் கொண்டு 2 நிமிடங்கள் வாம தேவ ஆசனத்தில் அதிக வார்த்தைகளை படித்துக்கொண்டே ரூபிக்ஸ் க்யூப் சரிசெய்வது.

19.கண்களை கட்டிக்கொண்டு 2 நிமிடங்கள் வாம தேவ ஆசனத்தில் pyra minx சரி செய்து கொண்டே அதிக வார்த்தைகள் படிப்பது.

20.கண்களை கட்டிக் கொண்டு 2 நிமிடங்கள் வாம தேவ ஆசனத்தில் ரூபிக்ஸ் க்யூப் சரி செய்து கொண்டே அதிக வார்த்தைகள் படிப்பது.

21.கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் வாம தேவ ஆசனத்தில் அதிக எண்களை இரு கைகளாலும் எழுதுவது.

22.கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் வாம தேவ ஆசனத்தில் அதிக எண்ணிக்கை விளையாடும் அட்டை கண்டுபிடித்தல்.

Prisha 11 year old girl won several awards and has set records

23.கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் ஸ்கேட்டிங்கில் கட்டை விரல், சுண்டு விரலில் பிரைன் ஜிம் பயிற்சி செய்தல்.

24. கண்களை கட்டிக்கொண்டு 5 நிமிடங்கள் அதிக பொருட்களை கண்டுபிடித்தல்.

26.கண்களை கட்டிக்கொண்டு அதிக நேரம் விருட்சக ஆசனத்தில் புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்தல்.

27.கண்களை கட்டிக்கொண்டு அதிக நேரம் விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்தல்.

28.கண்களை கட்டிக்கொண்டு அதிகநேரம் விபரீத சக்ர பந்த ஆசனத்தில் புத்தகத்தை பின்நோக்கி படித்தல்.

29.கண்களை கட்டிக்கொண்டு ஒரு நிமிடம் அதிக வளைவு தன்மையுள்ள ஆசனங்களை செய்தல்.

பிரிஷா பெற்ற விருதுகள்

யோகா ராணி, யோகக் கலா, யோகஸ்ரீ, யோக ரத்னா, ஆசன ஸ்ரீ, லிட்டில் யோகா ஸ்டார், பாரதி கண்ட புதுமைப்பெண், அன்னை தெரசா விருது, சக்சஸ் விருது, அப்துல்கலாம் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, அமைதிக்கான விருது, இளம் சாதனையாளர் விருது, 2016, 2017 ,2018, 2019,2020, 2021 போன்ற விருதுகளையும், பட்டங்களையும், சான்றிதழ்களையும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி பிரிஷாவை கௌரவப்படுத்தி உள்ளனர். திருநெல்வேலியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் நடைபெற்ற யோகாசனம் போட்டிகளில் சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவப் படுத்தினர். போட்டித் தேர்வுகளில் பிரிஷா பற்றி படித்து வருகின்றனர். கொரோனா தொற்று நோய் சூழ்நிலையிலும் ஏழை மாணவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+