நெல்லை-மைசூர் ரயில் ஏன் கேரளா வழியாக போகிறது.. மதுரை வழியே இயக்க எம்.பி. ஞான திரவியம் கடிதம்
திருநெல்வேலி: ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காக இன்று இயக்கப்படும் திருநெல்வேலி - மைசூர் ரயிலை மதுரை வழியாக இயக்க திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கேரளாவின் நலனுக்காக தென்தமிழக மக்களுக்கு பலனிக்காத வகையில் ரயில் இயக்கி திருநெல்வேலி மாவட்ட வளங்களை பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு பணிக்கான எழுத்துத் தேர்வு மே 9ம் தேதி நடக்கிறது. இதில் ஏராளமான மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மாணவர்களின் வசதிக்காக தேர்வு மையங்கள் உள்ள வழித்தடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருநெல்வேலி மைசூர் சிறப்பு ரயில்
இதன் ஒருபகுதியாக திருநெல்வேலி-மைசூர் சிறப்பு ரயில் (06039) இன்று (7ம் தேதி) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இரவு 10.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம். ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை. திருப்பூர், ஈரோடு வழியே சேலம் சென்று அங்கிருந்து பெங்களூரு வழியே மைசூருக்கு நாளை இரவு 11.55 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், மைசூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06040) மே 10ம் தேதி புறப்படுகிறது. அன்று இரவு 8.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் சேலத்துக்கு அடுத்தநாள் காலை 5.30 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு,எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியே திருநெல்வேலிக்கு 12ம் தேதி இரவு 9.30 மணிக்கு வருகிறது.

திருநெல்வேலி எம்பி எதிர்ப்பு
இந்நிலையில் தான் இந்த ரயில் சேவைக்கு திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் கேரள மக்களின் நலனை மனதில் வைத்து அம்மாநில அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் திருநெல்வேலியில் இருந்து கேரளா செல்லாமல் சேலம் வழியாக இயக்க அவர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் ரயில்வேக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

1110 கிமீ பாதையில் ரயில்
ரயில்வே தேர்வு வாரியத்தால் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டி தேர்வு நடப்பதை முன்னிட்டு திருநெல்வேலியில் இரந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். இதையடுத்து ரயில்வே துறை திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கர்நாடக மாநிலம் மைசூர்க்கு தேர்வு சிறப்பு ரயில் (வண்டிஎண் : 06039/06040) இயக்க அறிவித்துள்ளது. இந்த ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர், சேலம் மற்றும் பெங்களூர் வழியாக 1110 கிமீ சுற்றுபாதையில் இயக்கப்படுகின்றன.

மாற்றுப்பாதையில்...
இந்த ரயில் தென்தமிழக பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை என்று எனக்கு பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. இந்த ரயில் மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட்டால் 734 கிமீ தூரமும் மற்றுமு் 8 மணி நேர பயணமும் குறைக்கப்படும். மேலும் ஏழை தென்தமிழக மாணவர்களுக்கு தோராயமாக ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டணம் குறையும்.

தென்தமிழக மக்களுக்கு பயனில்லை
தென்னக ரயில்வே அதிகாரிகள் வேண்டுமென்றே கேரளாவில் உள்ள பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து தொடங்கும் அதிக சுற்றுப்பாதை ரயிலை இயக்குகின்றனர். இதன்மூலம் கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், குழித்துறை உள்ளிட்ட தென்தமிழக பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு இயக்கபட உள்ளது.

கடுமையாக எதிர்க்கிறேன்
தெற்கு ரயில்வே அதிகாரிகள் தென்மாவட்டங்களுக்கு தேவையில்லாத கேரளாவுக்கு நன்மை பயக்கும் ரயில்களை திருநெல்வேலிக்கு அனுப்புவதும், கேரளாவின் நன்மைகளுக்காக திருநெல்வேலி வளங்களை முழுமையாக பயன்படுத்துவதும் தொடர்கிறது. திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இதுபோன்ற கேரள திசை சார்ந்த அதிகதூரம் கொண்ட ரயில்கள் இயக்குவதையும், ரயில்கள் பராமரிப்பையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

உள்கட்டமைப்பை கெடுக்கும்
இவை அனைத்தும் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் டெர்மினல்களின் ரயில்வே உள்கட்டமைப்பை கெடுக்க கேரளாவை சேர்ந்த தெற்கு ரயில்வே அதிகாரிகளால் தொடர்ந்து முன்வைக்கப்படும் தூய தந்திரமான திட்டங்களாகும். அரசியல் ரீதியாக நாம் தமிழகத்தின் ஒருபகுதியாக இருப்பதால் இந்த சிறப்பு ரயில் மதுரை, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் பெங்களூர் வழியாக இயக்கப்பட வேண்டும்'' என கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications