திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜய் அரசியலுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போடும் எஸ்.ஏ.சந்திரசேகர்.. மாஸ்டர் பிளானை பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜய் அரசியலுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போடும் எஸ்.ஏ.சந்திரசேகர்- வீடியோ

    நெல்லை: நடிகர் விஜயை அரசியலில் இறக்கிவிடுவதற்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அதி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

    இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா தம்பதிகளின் மகன்தான் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலமாக தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் சந்திரசேகர்.

    அது ஒரு அரசியல் படம். அப்போது, நாளைய தீர்ப்பு விஜய்க்கு சாதகமாகவும் வரவேண்டும் என்ற அரசியல் கண்ணோட்டமும் சந்திரசேகருக்கு இருந்தது என்பார்கள் விபரம் அறிந்தவர்கள்.

    [விஜய் அரசியலுக்கு வந்தால் என்னங்க தவறு?- எஸ் ஏ சந்திரசேகர்]

    காதல் டூ ஆக்ஷன்

    காதல் டூ ஆக்ஷன்

    முதலில் காதல் ஹீரோவாக வலம் வந்து இளம் பெண்கள் மனம் வென்ற விஜய், 'திருமலை' திரைப்படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இப்போது மாஸ் ஹீரோ என்ற மிகப் பெரிய அந்தஸ்துடன், இளம் தலைமுறை நடிகர்களில் முதல் இடத்தில் உள்ளார். இதை பார்த்ததும்தான், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்று சந்திரசேகரின் மைண்ட்வாய்ஸ் இப்போது சத்தமாக கேட்கத் துவங்கி விட்டது.

    பல கட்சிகளுடன்

    பல கட்சிகளுடன்

    விஜய் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறியதுமே, அவரை அரசியலில் களமிறக்கும் முயற்சிகளை துவக்கினார், எஸ்.ஏ.சந்திரசேகர். அதற்காக காங்கிரஸ் கட்சியுடனும், அதன்பிறகு அதிமுகவுடன் பேச்சுவார்த்தைகளை திரைமறைவில் சந்திரசேகர் நடத்தியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். காங்கிரஸ் கட்சியில் நேரடியாக மாநில தலைவர் பொறுப்பு கேட்டதாகவும் இதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி, சமீபத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

    அதிமுக விஜய் மோதல்

    அதிமுக விஜய் மோதல்

    2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தார் விஜய். தான் ஒரு அணிலாக, அதிமுக வெற்றிக்கு உதவியதாக பெருமிதம் தெரிவித்த, விஜய் 'தலைவா' என்ற பெயரில் படத்தில் நடிக்க, ஜெயலலிதாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதன் விளைவாக படம் வெளிவருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. அதிமுகவுடன் விஜய்க்கு நெருக்கம் குறைந்தது. இதனால் தனித்து விடப்பட்ட விஜய், இப்போது திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மாறன் சகோதரர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். திராவிட அரசியலை விஜய் தனது அடையாளமாக முன்னெடுப்பது சமகாலத்திற்கு அவசியம் என்ற யோசனை சந்திரசேகருடையதாம்.

    அரசியல் நிலைப்பாடு

    அரசியல் நிலைப்பாடு

    இதையடுத்து தான் 'மெர்சல்' திரைப்படத்தில் சில புள்ளிவிவரங்கள் தப்பும் தவறுமாக இருந்தபோதும் கூட தைரியமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக வசனங்களை பேசினார் விஜய். ஜல்லிக்கட்டு, மாணவி அனிதா தற்கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட விவகாரங்களில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுடன் பங்கெடுத்து, தான் எந்த சித்தாந்தத்தை பின்பற்ற போகிறேன் என்பதை உரக்கச் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் முதல் முறையாக சமீபத்தில் நடைபெற்ற சர்கார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், அரசியல் பேச்சை உதிர்த்து, விரைவிலேயே அரசியலுக்கு வருவதற்கான மணி ஓசையை எழுப்பி விட்டார்.

    மதம் விவகாரம்

    மதம் விவகாரம்

    ஆனால் விஜய் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு குறுக்கீடாக இருப்பது அவர் சார்ந்த மதம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் நினைக்கிறாராம். தமிழகத்தில் பெருவாரியான மக்கள் இந்துக்கள். எனவே விஜய் கிறிஸ்தவர் என்பதை சுட்டிக் காட்டி அவரை தனிமைப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைவர்கள் இறங்கினர். மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற கோயில்கள் தொடர்பான ஒரு காட்சிக்காக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததோடு, அவரை ஜோசப் விஜய் என்று மதத்தை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார்.

    சந்திரசேகர் சர்ச்சை பேச்சு

    சந்திரசேகர் சர்ச்சை பேச்சு

    எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு கொடுக்கும் லஞ்சம் என்று கூறினார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உருவாக்கியது. இது போன்ற விவகாரங்கள் காரணமாக, இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும், இது தனது மகன் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை சந்திக்கும், சந்திரசேகர், அதற்குத்தானே மாஸ்டர் திட்டத்துடன் களமிறங்கி உள்ளார்.

    இந்துதான்

    இந்துதான்

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கரம் விழாவில் இன்று பங்கேற்று சந்திரசேகர் புனித நீராடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும், இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன். என்னை ஆன்மீகத்தில் ஈடுபட வைத்தது, சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று தெரிவித்தார். புஷ்கரம் விழாவில் பங்கேற்றதுடன், தான் ஒரு இந்து என்று அவர் தன்னிச்சையாக அறிவித்துள்ளது என்பது, தன் மீதும் தனது மகன் மீதும் விழுந்த மதரீதியிலான முத்திரையை நீக்குவதன் ஒரு அங்கம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன்மூலம் சந்திரசேகர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல செயல்படுகிறார். இது விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒரு முன்னோட்டம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

    English summary
    Director S.A.Chandrasekar trying his level best to Actor Vijay's political future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X