விஜய் அரசியலுக்கு வந்தால் என்னங்க தவறு?- எஸ் ஏ சந்திரசேகர்
Recommended Video

பாபநாசம்: விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்துக்கு மக்கள் இயக்கம் என பெயர் சூட்டி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில் அவரது சினிமா வசனங்களும் கதைக்கருவும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வண்ணமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
[விஜய் அரசியலுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போடும் எஸ்.ஏ.சந்திரசேகர்.. மாஸ்டர் பிளானை பாருங்க]

குட்டி கதை
இதைத் தொடர்ந்து சர்கார் பட இசை விழாவில் அவர் அரசியல் குறித்து பேசிய பேச்சு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் கவர்ந்தது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குட்டி கதையை விஜய் கூறியிருந்தார்.

மக்களுக்கு நல்லது செய்ய
விஜய்யின் அரசியல் பேச்சை தமிழக அமைச்சர்கள் எதிர்த்தனர். இந்நிலையில் பாபநாசத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறுகையில் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன்.

ஜக்கி வாசுதேவ்
விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள். மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு. என்னை ஆன்மீகவாதியாக மாற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவ்தான்.

இந்து மதம்
பிறப்பாக கிறிஸ்தவராக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்று பேட்டி அளித்தார் எஸ்ஏசி. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த போது விஜய் ஒரு கிறிஸ்துவர் என்பதை சுட்டிக் காட்ட அவரது வாக்காளர் அடையாள அட்டையை தோண்டி எடுத்தார் எச் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications