கண்ணீருடன் தமிழகம் வந்த உக்ரைன் மாணவர்கள்.. கனிவுடன் சந்தித்து பேசிய முதல்வர்.. நெகிழ்ச்சி வீடியோ..!
திருநெல்வேலி : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து மீண்டு வந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அவர்களது அனுபவங்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒன்பதாவது நாள் தாக்குதலை நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
தலைநகரான கீழ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் பக்கம் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கப்பட்டது.

மாணவர்கள் மீட்பு
உக்ரைனின் பல பகுதிகளில் இன்னும் பல மாணவர்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. மேலும் 10 ஆயிரம் மாணவர்கள் அங்கு தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின்
எல்லைகளில் தஞ்சம் புகுந்துள்ள மாணவர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது. இதுவரை பல கட்டங்களாக மாணவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மாணவர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் தாயகம் திரும்பினர். மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த வரும் தமிழக மாணவர்களை மீட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அரசுக்கு கோரிக்கை
கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் நாட்டிலிருந்து தலைநகரான டெல்லிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்து பேசியது. மேலும் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் தங்களது படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மாணவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

முதல்வர் சந்திப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வுக்குப் பிறகு முதல்வர் மதுரை விமான நிலையம் சென்றார். தனது பயண வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களான நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரேனில் இருந்து திரும்பி வந்த அவர்களது அனுபவம் மற்றும் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications