கால் தெரியாம பட்ருச்சு.. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை! ஜாமீனில் விடுவிக்கப்பட்ட எஸ்எஸ்ஐ குமார்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய போது வேனில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இன்னேஸ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் சீண்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் இன்னேஸ் குமார். நரம்புச் சுருள் நோய் இருப்பதன் காரணமாக காலை நீட்டிய போது தெரியாமல் பட்டுவிட்டதாக நீதிபதி முன்பு விளக்கமளித்ததால் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் இன்னேஸ் குமார் (வயது 49). இவர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

Tirunelveli Constable Harassment

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஈரோடு பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பணிக்காக நெல்லை மாநகர பகுதியில் இருந்து சென்ற ஆண் மற்றும் பெண் போலீசாருடன் இணைந்து சென்றுள்ளார்.

தொடர்ந்து அன்றைய தினம் இரவில் அவர்கள் போலீஸ் வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் இன்னேஸ் குமார் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னால் இருந்த இருக்கையில் பெண் காவலர் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் காவலரை இன்னேஸ் குமார் பாலியல் சீண்டல் செய்ததாகவும், தனது காலை வைத்து அந்த பெண் காவலரின் காலில் தடவி தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவலர் நெல்லை வந்து சேர்ந்ததும், மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது அறிவுறுத்தலின் பேரில் பெண் காவலர், பாளை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாலியல் சீண்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் இன்னேஸ் குமாரை கைது செய்தனர்.

கைதான குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்ற போது இதேபோல் மற்றொரு பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதன்பின்னர் அந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாலியல் தொல்லை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிறப்பு சார்பு ஆய்வாளர் இன்னேஸ் குமார். அப்போது தனக்கு நரம்பு சுருள் நோய் இருப்பதன் காரணமாக காலை நீட்டிய போது தெரியாமல் பெண் காவலரின் காலில் பட்டு விட்டதாகவும் மருத்துவ பிரச்சினை காரணமாகவே அவ்வாறு நடந்த நிலையில் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து இன்னேஸ் குமாரை சொந்த ஜாமீனில் விடுவித்த நீதிபதி துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+