நெல்லை மாநகராட்சி தேர்தல் விறுவிறு.. வந்து இறங்கிய பெங்களூர் இன்ஜினியர்கள்!
நெல்லை: நெல்லை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பெல் நிறுவன மென் பொறியாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்து, வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி வார்டு வரையறை செய்யும் பணி, மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருக்கும் வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு செய்யும் போன்றவை நடந்து வருகிறது.

பெங்களூர் இன்ஜினியர்கள்
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 55 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட பெல் பொறியாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

நெல்லை மாநகராட்சி
நெல்லை மாநகராட்சியில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தற்போது வெளியிடபட்ட வாக்காளர்களின் எண்ணிகையின் அடிப்படையில் ஒரு வாக்கு சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு மிகாமல் மொத்தமாக 490 வாக்கு சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு பணி
பயன்படுத்த தேவையான 1800 வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் 900 கட்டுபாட்டு இயந்திரங்கள் பெல் நிறுவன மென் பெறியாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.

வரிசை எண்
இதனை தொடர்ந்து இயந்திரங்களின் வரிசை எண் போன்றவை கணிணி மூலம் பதிவேற்றம் செய்யும் பணியும் நடைபெறுகிறது.பெல் பொறியாளர்கள் வாக்கு பதிவுக்கு தேவையான இயந்திரங்களை ஆய்வு செய்து சரிபார்த்த பின்னர் அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கு இந்திரத்தில் 1000 வாக்குகள் வரை பதிவு செய்து மாதிரி வாக்கு பதிவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications