தென்காசியில் மனைவி,2 ஆண் குழந்தைகளுடன் சென்ற காவலர்.. யாருக்குமே நடக்கக்கூடாத சம்பவம்
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தென்காசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி, மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் சென்றபோது யாருமே எதிர்பார்க்காத சம்பம் நடந்துள்ளது. அவரது குடும்பத்தற்கே ஒரு கார் எமனாக மாறி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவருடைய மகன் கண்ணனுக்கு 35 வயது ஆகிறது. இவர் தென்காசி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி செல்வராணி, இலஞ்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ராம் கிரிஷ் (5), ராம் கிரிடிக் (6 மாதம்) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.

காவலர் கண்ணன் தனது மனைவி செல்வராணி மற்றும் குழந்தைகளுடன் தென்காசி அருகே இலஞ்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று மாலையில் காவலர் கண்ணன் மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கடையநல்லூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவில் அங்கிருந்து இலஞ்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் வாகனம் வந்து கொண்டிருந்தது.. தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை ராம் கிரிஷ், காவலர் கண்ணன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த செல்வராணி, குழந்தை ராம் கிரிடிக் ஆகியோரை தென்காசி தனியார் மருத்துவனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து இடைகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி காவலர் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications