திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி கொடுங்க.. கலெக்டருக்கு திருவள்ளூர் சுந்தரவேலு கடிதம்!

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் அளிக்காத அதிகாரியை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திருத்தணி தாலுகா, பெரியகளக்காட்டூரைச் சேர்ந்த சுந்தரவேலு, என்பவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கூறியுள்ளதாவது:

மீண்டும் பள்ளிக்கு அழைத்து செல்லும் பிக் பாஸ்...இன்று சேட்டைக்கு பஞ்சம் இருக்காது போலமீண்டும் பள்ளிக்கு அழைத்து செல்லும் பிக் பாஸ்...இன்று சேட்டைக்கு பஞ்சம் இருக்காது போல

 தகவல் பெறும் உரிமை சட்டம்

தகவல் பெறும் உரிமை சட்டம்

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 22ம் தேதி பதிவு தபாலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி பெரிய களக்காட்டூர், வங்கித் தலைவர், வங்கி செயலாளர் மீது இதுவரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தங்கள் புகார் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ், மே மாதம் 5ம் தேதி தங்களுக்கு மேல்முறையீட்டு மனுக்கள் தவறாமல் செய்து வருகிறேன்.

செருப்பால் அடிக்க அனுமதி

செருப்பால் அடிக்க அனுமதி

தபால் மூலம் எனக்கு சான்றிட்டு வழங்க கேட்டதற்கு நகை கடன் எத்தனை பேர் பெற்றார்கள் என்ற விபரம் கூட அலுவலகத்தில் இல்லை என்று சொன்னீர்கள். எனவே நான் தங்களைக் கேட்டுக் கொள்வது சம்பந்தப்பட்ட அதிகாரி யார் என்று அறிந்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனையாக, மனுதாரர்கள் செருப்பால் அடிக்க சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆட்சித் தலைவருக்கு சுந்தரவேல் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பிரமுகர்

அதிமுக பிரமுகர்

இந்த கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ மற்றும் வழக்கறிஞரான அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் பாபு முருகவேல். தன்னுடைய பணியை முறையாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க ஒருவர் அனுமதி கேட்டுள்ளார் அதற்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் கருத்து

மனுதாரர் கருத்து

இதுதொடர்பாக மனுதாரர் சுந்தரவேலை, "ஒன்இந்தியா தமிழ்" சார்பில், தொடர்பு கொள்ள முயன்றோம். தொலைபேசி அழைப்பு மணி ஒலித்த போதிலும் எதிர்முனையில் யாரும் எடுக்கவில்லை என்பதால் மேற்கொண்டு அவரிடம் கருத்து கேட்க முடியவில்லை.

English summary
A man has written a letter to the Tiruvallur District Collector seeking permission to slap an uninformed officer under the Right to Information Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X