சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
திருவண்ணாமலை: திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது. திமுக இளைஞரணி கடந்து வந்த பாதையை முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் நினைவு கூர்ந்தார். மேலும், பாஜக எவ்வளவு முயன்றாலும் தமிழ்நாட்டில் வெல்லவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக இந்த முறை ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கிறது. இதற்காகக் கட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது.

ஸ்டாலின்
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். மாஸாக, கெத்தாக இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் என்று சொல்லி ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். எ.வ.வேலுவிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அளவுக்கு மிகச் சிறப்பாக வேலைகளை முடித்துவிடுவார் என எ.வ.வேலுவை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், உங்களைப் பார்க்கும்போது 50 ஆண்டுகள் டைம் ட்ராவல் செய்து பின்னால் போனது போல இருக்கிறது.. தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞரணியை வளர்த்தெடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது" என்றார். மேலும், இளைஞரணியினரின் எனர்ஜி இப்போது எனக்கும் டிரான்ஸ்பர் ஆகி இருக்கிறது என்ற ஸ்டாலின், திமுகவை தொடங்கியபோது அண்ணாவுக்கு வயது 40 தான், கருணாநிதிக்கு வயது 25 தான் என்றும் இளைஞர்களாகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான இது என்றும் கூறினார்.
இளைஞரணி நினைவுகள்
ஸ்டாலின் மேலும் பேசுகையில், "எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு ஐம்பது ஆண்டுகள் டைம்-டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று, எனக்கு இருக்கிறது! உங்களைப் போன்ற இளைஞனாக - கிராமம் கிராமமாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது!
எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணை பிரச்சாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது இரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது - புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது! அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் 'டிரான்ஸ்பர்' ஆகியிருக்கிறது!
திராவிட உணர்வு
தெருத்தெருவாக - வீடு வீடாக சென்று பேசி, டீக்கடையையும் - சலூனையுமே, அரசியல் மேடைகளாக மாற்றி, மக்களை எஜுகேட் செய்தோம். உலக வரலாற்றையெல்லாம் சொல்லி, நாம் ஏன் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லி, மக்களுக்குள் நல்ல மாற்றத்திற்கான விதையை, சிந்தனையாக விதைத்தார்கள்! மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள். அவர்கள் பேச்சில் சொன்னதையெல்லாம், மக்கள் அவரவர்களின் ஊரில் எடுத்துச் சொன்னார்கள். திராவிட இனஉணர்வை வளர்த்தார்கள்.
உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்
உதயநிதி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாகச் செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார்! கொள்கை எதிரிகள், "உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்" என்று புலம்புகிறார்கள்! அந்த அளவிற்குக் கொள்கையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்! கழகத்திற்கு எது தேவை என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி!
அமித்ஷாவுக்கு பதிலடி
அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல்! அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், "அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்" என்று சொல்கிறார் அமித்ஷா அவர்களே! நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு! இது தமிழ்நாடு! எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே... அன்புடன் வந்தால், அரவணைப்போம்... ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்" என்றார்..
-
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!











Click it and Unblock the Notifications