Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதியை முதல்வராக்க நினைக்கிறார் ஸ்டாலின்.. கருணாநிதி என்ன மன்னர் பரம்பரையா?: எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்து உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார். அது நடக்காது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

ஆரணி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரக் கூட்டங்களில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று பேசுகிறார். இல்லை, 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெல்லும். தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரத்துக்கு செல்கிறேன். நான் போகும் இடங்களில் எல்லாம் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்.

Stalin tries to make Udhayanidhi as Chief Minister says Edappadi palanisamy

முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் பல முயற்சிகளைச் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஐ.டி விங் அணியினர், தொண்டர்கள் மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையையும் உடைத்து தகர்த்து எறியும் கட்சி அதிமுக. முதல்வர் ஸ்டாலினைப் போல ஆயிரம் பேர் பிறந்து வந்தாலும் அதிமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

இந்த திமுக ஆட்சி எப்போது வந்ததோ, ஸ்டாலின் எப்போது முதல்வர் ஆனாரோ, அப்போதே தமிழகத்துக்கு சனி பிடித்துக்கொண்டது. இந்த ஏழரை சனி இத்தேர்தலில் அகற்றப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி ஒரு பொம்மை முதல்வரின் ஆட்சி. அதனால்தான், எந்த தொழிலுமே செய்ய முடியாத ஒரு அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஒரு திட்டத்தை அறிவித்த உடன் அதற்கு ஒரு பெயரை வைத்துவிடுவார். அதற்கு ஒரு குழு அமைத்துவிடுவார். அப்படி 52 குழுக்களை அமைத்த ஒரே அரசு இந்தியாவிலேயே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தான். இது திராவிட மாடல் ஆட்சி அல்ல, கமிட்டி அரசு என்று மக்கள் பேசி வருகின்றனர்.

ஒரு குழு அமைத்துவிட்டால், அதோடு எல்லாம் முடிந்து போய்விட்டது. அந்த திட்டத்தை அதோடு கிடப்பில் போட்டுவிடுவார். இதுவரை 52 குழுக்களை அமைத்தீர்களே, இந்த 52 குழுக்களின் பணிகள் என்ன? அதிமுக வெள்ளை அறிக்கை கேட்டது. இதுவரை வெள்ளை அறிக்கை கிடைக்கவில்லை.

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறையே கிடையாது. ஊழலுக்காக ஒரு அரசாங்கம் கலைக்கப்பட்டது என்றால், அது திமுக அரசுதான். கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல் பிறந்துவிட்டது. வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், அரிசி பேர ஊழல் என்று ஊழலுக்குச் சொந்தமான கட்சி திமுக. அதேபோல் வாரிசு அரசியல் கட்சி திமுக.

கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்தது, உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார். அது நடக்காது, அது வேறு விஷயம். ஏன் திமுகவில் வேறு ஆளே இல்லையா? திமுகவில் வேறு ஆட்களே கிடையாது. அனைத்து கட்சிகளும் கட்சிகளைப் போல இயங்குகின்றன. ஆனால், திமுக கார்ப்பரேட் கம்பெனி போல இயங்குகிறது. இதனால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. எப்போதும் அவரது குடும்பத்தைப் பற்றிய சிந்தனைதான் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும்.

ஸ்டாலின் தமிழக மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டதால், இந்தியா கூட்டணி என்ற பெயரில் வாக்குகளை பெற நாடகம் நடத்துகிறார். 2021-ல் நடைபெற்ற தேர்தலில் 520 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவையில் 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சை பொய் சொல்கிறார். மக்களை பாஜக அரசும், திமுக அரசும் வாட்டி வதைக்கிறது." எனப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+