திருவண்ணாமலை இளைஞரை சுற்றிலும் தங்க நகைகள்.. அடுத்து தி.மலை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த செம ட்விஸ்ட்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தங்க நகைகள் திருடு போன சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. இது சம்பந்தமான குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அங்கேதான் ஒரு டுவிஸ்ட்
தங்கத்தின் மதிப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.. பழைய தங்க நகைகள் என்றாலும், அதற்கான மதிப்பு குறைவதில்லை.. தங்க நகைகளில் கவரிங் எது? நிஜமான தங்கம் எது? என்பதை கண்டுபிடிக்கவே முடிவதில்லையாம். அந்த அளவிற்கு தகிடுதத்தம் வேலை நடப்பதாக சொல்கிறார்கள்.

அசல் நகைகள் - கவரிங் நகைகள்
அதாவது, கவரிங்கில் நகைகளை செய்துகொண்டு, அதில், தகட்டில் தங்கத்தை கோட்டிங் செய்துவிடுவார்கள். இதுதான் பார்ப்பதற்கு அச்சுஅசல் தங்கம் போலவே இருக்கும்
இதைப்பார்த்ததுமே, பணத்தை கொட்டி அதை வாங்கி, மக்கள் ஏமாந்துவிடுகிறார்கள். அதனால், தங்க நகைகள் வாங்குவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட விவகாரங்களில், நகை கடைகளில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நகைக்கடையில், அந்த நகையை உரசி பார்த்து, தரம், விலையை சொல்லிவிடுவார்கள்.
தங்க நகைகள் திருட்டு
அதேபோல, தங்க நகைகள் திருட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நேற்று நடந்துள்ளது.. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்தி சாலையில், ஒரு பிரபலமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது.. இந்த கடைக்கு இளைஞர் ஒருவர் நகைகள் வாங்க வந்திருக்கிறார்.
அப்போது அவர் குறிப்பிட்ட டிசைனில் நகைகளை கேட்டிருக்கிறார்.. அதன்படியே நகைக்கடை ஊழியர்களும், அவர் கேட்ட டிசைன்களில் நகைகளை எடுத்து அவர்முன்பு வைத்தனர்.. அந்த நகைகள் ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தவர், திடீரென அந்த நகைகளை அள்ளிக்கொண்டு கடையிலிருந்து ஓட்டம் பிடித்தார்..
தி.மலை பஸ் ஸ்டாண்டு
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் கூச்சலிட்டு பின்னாடியே விரட்டிக் கொண்டு ஓடினார்கள்.. அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் இளைஞரை துரத்திக் கொண்டு ஓடினார்கள்.. கடைசியில் பஸ் ஸ்டாண்டுஅருகே அவரை பொதுமக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
பிறகு போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அவர் ராணிப்பேட்டை மாவட்டம் கே.கே.நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பது தெரியவந்தது.
செம ட்விஸ்ட்
ஆனால், இவ்வளவு ரிஸ்க் எடுத்து திருடிக்கொண்டு மூச்சிறைக்க ஓடிய இளைஞருக்கு அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.. அவர் திருடிச் சென்றது கவரிங் நகைகளாம்.. கடைக்குள் அந்த இளைஞர் நுழைந்தபோதே, அவர் மீது கடை ஊழியர்களுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது. அதனால்தான், கவரிங் நகைகளை எடுத்து அவரிடம் காண்பித்துள்ளனர்...
ஊழியர்கள் சந்தேகப்பட்டதைபோலவே, அது உண்மையான தங்க நகைகள் என்று நம்பி திருடி சென்றுள்ளார்.. இப்போது அந்த இளைஞரிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications