குல்லா போட்டவர் எப்படி கோவிலுக்கு வரலாம்? அமைச்சருடன் கடும் வாக்குவாதம்! திருவண்ணாமலையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தீபத் திருவிழா தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ,ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தொப்பி (குல்லா) அணிந்த நபர் ஒருவர் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

Tiruvannamalai Temple Aadhav Arjuna Ramesh

தொடர்ந்துபல்வேறு அரசு துறைகள் சார்பாக முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

பின்னர் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், காவல்துறை உயர் அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

வழக்கமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் வரை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பது மற்றும் செய்தி சேகரிப்பது வழக்கம். ஆனால், இன்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பிரதான கோபுரமான ராஜகோபுரத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கடந்த ஆட்சியில் கூட பத்திரிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது இதுபோன்ற செய்வது சரியா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தொப்பி அணிந்த நபர் ஒருவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் கோவிலுக்குள் சென்றார். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குல்லா அணிந்த நபர் ஒருவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு ஒரு விதி; மற்றவர்களுக்கு ஒரு விதியா? எனக் கூறி அங்கிருந்த சிலர் அமைச்சர் ரமேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தொப்பி அணியவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் பங்கேற்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+