சிப்காட் பழக்கம்.. தலைக்கேறிய போதையில் அடங்கிய உயிர்! அழுது புரண்ட ராஜீ! மொத்த ப்ளானும் சொதப்பல்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த மனைவி உள்பட மூன்று பேர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை செய்தது எப்படி என கொலையாளிகள் அதிர வைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் குடும்ப உறவுகள் சிதைந்து வருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்தொற்றுமை இல்லாததன் காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்வது அல்லது வேறு துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களது மனம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் முறையற்ற உறவு திருமணம் தாண்டிய உறவு உள்ளிட்ட பிரச்சனைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது.

முறையற்ற உறவு
சில நேரங்களில் கொலை போன்ற கொடூர நிகழ்வுகளிலும் இது கொண்டு போய் விட்டு விடும். அப்படி ஒரு நிகழ்வுதான் திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ளது. வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே கடுகனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமி காந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் குடும்ப தகராறு காரணமாக வெளியே சென்ற லட்சுமி காந்தன் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

கணவன் கொலை
இதற்கிடையே அவரது வீட்டின் அருகே வயல்வெளியில் லட்சுமி காந்தன் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து தகவல் அறிந்த பெரணமல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் அவரது மனைவி ராஜேஸ்வரியும், செய்யாறு சிப்காட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் உதயசூரியன் என்பவரும் சிலருடன் சேர்ந்து லட்சுமி காந்தனை கொலை செய்தது தெரியவந்தது.

கள்ளக் காதல்
விசாரணையில் லட்சுமி காந்த் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும், கனகம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயசூரியன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் லட்சுமி காந்த் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

வேலை இடத்தில் உறவு
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி, உதயசூரியன், அவரது நண்பர் பாண்டியன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தின் மனைவி ராஜேஸ்வரி செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் மேற்பார்வையாளராக உதயசூரியன் வேலை செய்து வந்தார். அவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

கொடூர கொலை
மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, கணவரை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனை திருமணம் செய்ய ராஜேஸ்வரி முடிவு செய்தார். அதன்படி கணவருக்கு உதயசூரியனை அறிமுகப்படுத்தியுள்ளார். நட்பாக பழகியுள்ளனர். அவ்வப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்நிலையில், உதயசூரியன் அவரது நண்பரான பாண்டியன் என்பவருடன் சேர்ந்து லட்சுமிகாந்தை மது குடிக்க அழைத்துச் சென்றனர். அவருக்கு மது போதை தலைக்கு ஏறியதும் இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். அவரது கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்திவிட்டு உடலை குட்டையில் வீசிவிட்டு வந்து விட்டு தப்பியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications