****களை சைலண்டா அடிக்கனும்! இல்லையா.. மத கலவரம் பண்ணனும்! திருவாரூர் பாஜக தலைவரின் பகீர் ஆடியோ!
திருவாரூர் : மத மோதல்களை தூண்டும் விதமாக திருவாரூர் நகர பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் செந்தில் ராஜ்குமார் லட்சுமணன் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்ட பாஜகவில் ஊடகப்பிரிவு தலைவராக செந்தில் ராஜ்குமார் லட்சுமணன் என்பவர் இருந்து வருகிறார். இவர் பேசியதாக பரப்பப்பட்டு வரும் ஆடியோ தான் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்தும் பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் குறித்தும் மத மோதல்களை தூண்டும் வகையில் அவர் பேசியதாக திருவாரூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வாட்ஸ்ஆப் குழுக்களில் ஆடியோ ஒன்று பரவி வருகிறது.

பாஜக பிரமுகர்
அந்த ஆடியோவில் செந்தில் ராஜ்குமார் லட்சுமணன் பேசியதாக," பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நமக்கு உதவியாகத்தான் இருக்கிறார். வழக்கறிஞர்களுடன் நமக்கு சர்ப்போர்ட் செய்கிறார். பாஜக திமுக போன்று கிடையாது அதே நேரத்தில் இந்து முன்னணி போல நாம் மேடைகளில் பேசக்கூடாது ஒரு கட்டுப்பாட்டோடு பேச வேண்டும்.

அதிர்ச்சி ஆடியோ
கட்சி மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு இந்து முன்னணி போல பேசக்கூடாது. அரசியல் கட்சி என்றால் அரசியல் கட்சி போல பேச வேண்டும். முஸ்லீம்களை அடிக்க வேண்டும் என்றால் அடிக்கணும். ஆனால் சைலன்டா அடிக்கணும் வயலெண்டா அடிக்க கூடாது. உணர்ச்சிவசப்பட்டு ஒருவனை கட்சி மேடையில் திட்ட வேண்டும் என்றால் என்ன நடக்கும்? நம்ம மக்களே பின்னாடி போயிடுவாங்க.

பள்ளிவாசல்களை இடிக்கனும்
அதற்கு அதிகாரத்தில் உட்கார்ந்து அவர்களை வளர விடாமல் அடிக்கணும். இல்லை அதற்கான பேஸ் இருக்கா மத கலவரம் பண்ணனும். மதத்தை அப்புறப்படுத்திட்டு அதிகாரத்திற்கு வரும் வரை உள்ள வச்சு தான் அடிக்கணும். நபியை திட்டுவதால் அவர்கள் அடங்கி விட்டார்களா? அடங்கவில்லை. ஒட்டுமொத்த பள்ளிவாசல்களையும் இடித்து தள்ளனும். அதற்கு அதிகாரத்திற்கு வரணும் அத விட்டுட்டு அவசரப்பட்டா ஆகாது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உணர்ச்சிவசப்பட்டு நானே சில நேரங்களில் பேசி விடுகிறேன்" என கூறுவதாக அந்த ஆடியோ இருக்கிறது. தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த ஆடியோ உண்மைதானா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications