பார்வதியுடன் சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்.. 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தல வரலாறு

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: தமிழகத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே செஸ் விளையாட்டு தோன்றியதாகவும் சிவனும் பார்வதியும் செஸ் விளையாடியதாகவும் கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இது 64 கட்டங்களை கொண்டு இருவர் விளையாடும் விளையாட்டாகும். இந்த செஸ் விளையாட்டானது இந்தியாவில் உருவானது என சொல்லப்பட்டதாலும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமானது.

விளையாட்டின் தற்போதைய வடிவமானது ஸ்பெயின் மற்றும் தெற்கு ஐரோப்பியாவின் பிற பகுதியில் 15 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தோன்றியது. இதற்கு சதுரங்கம் என்ற பெயரும் உண்டு. அதாவது தனது அரசனை பாதுகாத்துக் கொண்டு எதிரே விளையாடுபவரின் அரசனை பிடிப்பதே இந்த ஆட்டமாகும்.

இந்தியாவில் தோன்றியது

இந்தியாவில் தோன்றியது

செஸ் விளையாட்டு இந்தியாவில் தோன்றியது என கூறப்பட்டாலும் இது தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக இருந்ததாக ஒரு கோயிலின் தல வரலாறு கூறுகிறது. ஆம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மன்னார்குடி சாலையில் பூவனூர் என்ற கிராமத்தில்தான் அந்த கோயில் உள்ளது.

1500 ஆண்டுகள்

1500 ஆண்டுகள்

இந்த கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது. இதன் பெயர் சதுரங்க வல்லபநாதர் கோயில் ஆகும். இது 103 ஆவது சிவத்தலமாகும். இந்த கோயிலின் மூலவர் சதுரங்க வல்லபநாதர் உள்ளார். வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாக தோன்றினார் அம்பிகை. சிவன் சித்தர் வேடத்தில் வந்து தான்தான் சதுரங்க விளையாட்டில் சிறந்தவன் என கூறினார்.

அம்பிகை

அம்பிகை

அப்போது அந்த வசுசேனன் அப்படியா என் மகளுடன் விளையாடி ஜெயிக்க முடியுமா. அம்பிகையும் நன்றாக விளையாடுவார் என்றார். உடனே சித்தர் வேடத்தில் இருக்கும் சிவன் ஒப்புக் கொள்கிறார். இதையடுத்து சிவனும் அம்பிகையும் சதுரங்கம் விளையாடுகிறார்கள். இதில் சிவபெருமான் வெற்றி பெறுகிறார்.

Recommended Video

    Chess வரலாறும், கிராண்ட் மாஸ்டர்களும்.. *Sports
    சதுரங்க வல்லபேசுவரர்

    சதுரங்க வல்லபேசுவரர்

    இதையடுத்து தனது சிவபெருமான் வடிவத்தில் தோன்றினார். இதனால் மகிழ்ந்த மன்னன் தனது மகளை சிவனுக்கு மணமுடித்து கொடுத்தார். இதனால் சிவனுக்கு சதுரங்க வல்லபேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி ஆகிய இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. எனவே இந்த கோயிலின் வரலாற்றை வைத்து சதுரங்கம் விளையாட்டு தமிழகத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தோன்றியது என அறியப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+