நெல் வீணாகவில்லை.. சிதறிக் கிடந்ததை எடுத்து காட்டியுள்ளார் உதயகுமார்.. அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
திருவாரூர் : கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகவில்லை என்றும், நெல் மூட்டைகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒன்று, இரண்டு சிதறிய முளைத்த நெல்லை எடுத்து ஆர்.பி.உதயகுமார் காண்பித்துள்ளார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மூடைகளில் இருக்கும் நெல்மணிகள் முளைத்து உள்ளது என்று எடுத்துக் காட்டினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. தமிழக அரசின் மெத்தன நடவடிக்கை காரணமாக 5 ஆயிரம் நெல் மூடைகளுக்கு மேல் மழையில் நனைந்து முளைத்துள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டு குறித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி. அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதாலும் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் என்னை இன்னும் இரண்டு நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் தங்கி இருந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

முதல்வர் ஒப்புதல்
மேலும் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தில் 103 திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனடியாக தனியார் மற்றும் அரசு அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு தரமான அரிசி மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட உள்ளது. அதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள்
ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் மூலம் கொண்டுவரப்படும் நெல் பாதுகாக்கப்படும் வகையில் மேலும் 3 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு செய்யக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் சேமிப்பு கிடங்குகள் உருவாக்க முதல்வர் அனுமதி தெரிவித்திருக்கிறார்" எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மோசம்
மேலும் கடந்த அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டது. அப்போது ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்உருவாக்கி இருந்தால் மழை காரணமாக நெல் மூட்டைகள் நனையும் அவலம் ஏற்பட்டு இருக்காது. ஒன்று இரண்டு சேமிப்பு கிடங்குகளை கூட உருவாக்க கடந்த அதிமுக அரசு தவறிவிட்டது.

திமுக ஆட்சியில்
தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகள் வியர்வை சிந்தி கொண்டு வந்த நெல்லை மழையில் நனையவிடாமல் பாதுகாக்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தேவையான தார்பாய்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பகல் நேரங்களில் திறந்து விடப்படும் இரவு நேரங்களில் மூடப்படும் என்றும் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் எந்த இடத்திலும் உடைப்பு ஏற்படாதவாறு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் மேலும் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வரக்கூடிய மழை காலங்களில் பயன்படுத்துவதற்கும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உதயகுமார் பொய் குற்றச்சாட்டு
அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கப்பலூர் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்குச் சென்று அங்கு நெல் மூட்டைகள் மனையில் நனைந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது நெல் மூட்டைகள் எதுவும் நனையவில்லை என்றும் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒன்று, இரண்டு சிதறிய முளைத்த நெல்லை எடுத்து காண்பித்துள்ளார் என்றும் கூறியதாக தெரிவித்தார்.

சேமிப்பு கிடங்கை உருவாக்கவில்லை
உதயகுமார் அமைச்சராக இருந்தபோது 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சி செய்தபோது ஒரு நெல் சேமிப்பு கிடங்கையும் உருவாக்கவில்லை என்றும் ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கப்பலூர் பகுதியில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு உருவாக்கவும் திருமங்கலம் பகுதியில் 3,500 மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு உருவாக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
"அதிமுக தொண்டர்களிடம் பிச்சை கேட்கிறீர்களா?" ஆதவ் அர்ஜுனா மீது ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications