மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் காது கொடுத்து கேளுங்கள்...சொல்வது அன்பில் மகேஷ்
குழந்தைகள் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் வாயை அடைக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
திருவாரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவாரூர் மைய நூலகத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக பிரதமர் மற்றும் ஆளுநரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு சட்டரீதியான போராட்டத்தில் முதல்வர் ஈடுபட்டு கொண்டிருப்பதாக கூறினார்.
மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் வாயை அடைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அதற்குப்பின் மாணவர்களிடமிருந்து எதையும் பெற முடியாது என்றும் தெரிவித்தார்.

தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தைகள் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புகார் எண்
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி புகார் தெரிவிக்கக்கூடிய எண்ணை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் பள்ளி வளாகத்திற்குள் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மன ரீதியான பிரச்சனை
தமிழகம் முழுவதும் 412 வட்டங்களுக்கு வட்டத்திற்கு 2 மருத்துவர்கள் என மாணவர்களை கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டும் மாணவர்களின் மன ரீதியான பிரச்சனைகளை ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரவணைத்து செல்லும் முதல்வர்
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளன. அதன் பிறகு எந்தெந்த இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தார். துறை ரீதியாக எடுக்கப்படுவதற்கும் முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டசபையில் முதல்வர் பேசும்போது இது எனது ஆட்சி அல்ல நமது ஆட்சி என்றார். அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வர் தான் நம் முதல்வர் என்றும் அன்பில் மகேஷ் கூறினார்.
Recommended Video

மேயர் பதவி
உதயநிதி ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏவாக உதயநிதி, மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் அடுத்த பெரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்ற மக்களின் ஆசையை தான் கூறியிருக்கிறேன். அவர் அமைச்சராக வந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications