நள்ளிரவில் அலறிய பயணிகள்! சிக்னலுக்கு நின்ற திருப்பதி ரயிலில் திகுதிகுவென புகுந்த கொள்ளையர்கள்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் சிக்னலுக்காக நடுவழியில் நின்றது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், திடீரென 10க்கும் மேற்பட்ட கொள்ளை கும்பலினர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திகுதிகுவென ரயிலுக்குள் ஏறினர். பின்னர் பயணிகளை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி 10க்கும் மேற்பட்ட பெட்டிகளில் உள்ள பயணிகளிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் என்ற இடத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா என்ற எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பதிக்கு இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். நேற்று முன் தினம் இந்த ரயில் வழக்கம் போல சென்று கொண்டிருந்தது.

gang-entered-into-train-waiting-for-signal-near-tirupati-and-robbed-passengers-jewelry

ஆயுதங்களுடன் ரயிலுக்குள் ஏறிய கும்பல்

ரயில் நள்ளிரவில் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள அனந்தபூர் மாவட்டம் குத்தி என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தது. அப்போது ரயிலுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் திகுதிகுவென ஏறியது. ரிசர்வேஷன் பெட்டிக்குள் ஏறிய கொள்ளை கும்பல் அசந்து தூங்கி கொண்டு இருந்த போது அவர்களை வந்து எழுப்பியது.

இதனால் நள்ளிரவில் திடீரென யாரோ வந்து எழுப்புகிறார்களே என அதிர்ச்சி அடைந்து எழுந்த பயணிகள், எதுவும் விபத்து நடந்துவிட்டதா? என அதிர்ச்சி மீளாமல் இருக்க.. அதற்குள் கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை எடுத்தனர். ஆயுதங்களை எடுத்த கொள்ளை கும்பல், பயணிகளிடம் நகை, பணத்தை கேட்டு மிரட்டியது. இதனால் பயணிகள் கத்தி கூச்சலிட்டு அலறினர்.

கொலை செய்துவிடுவோம் என மிரட்டல்

சத்தம் எழுப்பினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய கொள்ளையர்கள், மொத்தம் 10 பெட்டிகளில் இருந்த பயணிகளை மிரட்டி நகை, பணம் மற்றும் பொருட்களை பறித்து சென்று இருக்கிறார்கள். அச்சத்தில் உறைந்த பயணிகள், என்ன செய்வது என தெரியாமல் திணறினர். ரயில் திருப்பதி சென்றதும் ரயிலில் நடந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசில் பாதிக்கப்பட்ட பயணிகள் புகாரளித்தனர்.

ரயில் பயணிகள் அச்சம்

சிக்னலுக்காக ரயில் நிறுத்தப்படும் இடத்தை முன்கூட்டியே கண்டறிந்த கும்பல், தங்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த கொள்ளை கும்பலில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

சமீப காலமாக ரயில்களில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள், ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ரயில்களில் போலீசார் உரிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே பயணிகள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+