திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..ஜூன் மாத டிக்கெட் வாங்குவோர் கவனத்திற்கு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வழிபட ஜூன் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் ஜூன் மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் வெளியிடப்படுகின்றன.
அதில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அந்தச் சேவைகளுக்கான எலக்ட்ரானிக் குலுக்கல் பதிவு 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் செய்யலாம். டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் 20 முதல் 22-ந்தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும்.
அதேபோல் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஜேஷ்டாபிஷேகம் ஆகிய சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மெய்நிகர் சேவைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரிசன ஒதுக்கீடுகள் 21-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் 23-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசனத்துக்கான டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டான ரூ.300 கட்டண டிக்கெட் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
திருமலை, திருப்பதியில் அறைகள் முன்பதிவு
திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான விடுதிகளில் உள்ள அறைகளுக்கான முன்பதிவு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் [சந்தேகத்திற்குரிய இணைப்பு அகற்றப்பட்டது] என்ற இணையதளம் மூலம் ஸ்ரீவாரியின் ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேரக் கட்டுப்பாடு தொடர்பான ஒரு புதிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது மார்ச் 16ம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டோக்கன் வைத்திருக்கும் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய டிக்கெட்டில் அல்லது டோக்கனில் எந்த நேரம் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த நேரத்தில் மட்டுமே நீங்கள் திருமலையில் தரிசன வரிசையில் நுழைய அனுமதிக்கப்படுவீர்கள். ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மிக முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ வந்தால், வரிசையில் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று தேவஸ்தானம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குப் பல மணிநேரம் முன்னதாகவே வரிசையில் வந்து காத்து நிற்பதால், கியூ காம்ப்ளக்ஸ் பகுதிகளில் தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கவே இந்தத் "துல்லியமான நேர அனுமதி" முறை கொண்டுவரப்பட்டிருக்கிறது.
தெலுங்கு வருடப்பிறப்பை (யுகாதி) முன்னிட்டு மார்ச் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது (பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது). மார்ச் 17 அன்று கோவிலில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications