திருப்பதி ஏழுமலையான் தரிசனம் : டிசம்பர் மாத இலவச தரிசன டிக்கெட் புக்கிங் முடிந்தது
திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்த்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரியது திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினசரியும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். உண்டியல் காணிக்கை தினசரியும் கோடிக்கணக்கில் வசூலாகும்.
கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில நிமிட நேரங்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.
டிசம்பர் மாதத்தில் கார்த்திகை மாதம் பாதி நாட்களும் மார்கழி மாதம் பாதி நாட்களும் இணைந்து வருகிறது. இந்த மாதங்களில் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தாலும் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் புக் செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதனை பக்தர்கள் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இலவச தரிசன டிக்கெட் போல டிசம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இதனிடையே திருமலை திருப்பதி டைரி, காலண்டர்கள் வாங்குவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டி வருவார்கள். இந்த ஆண்டு டைரி, காலண்டர் ஆன்லைன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in இணைய தள பக்கத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications