திருப்பூரில் கோழிக்கறி சாப்பிட புதுமனைவி மறுப்பு.. உடனே ஓடிய புதுமாப்பிள்ளை.. இப்படியுமா நடக்கும்
திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் பர்னிச்சர் கடையில் வேலை செய்தபோது தன்னுடன் வேலை செய்து வந்த சுபலட்சுமி என்பரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் பெற்றேரின் எதிர்ப்பை மீறி கடந்த ஒரு மாதம் முன்பு தான் திருமணம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வசித்துள்ளனர்.இந்நிலையில் காதல் மனைவி சுபலட்சுமி கோழிக்கறி சாப்பிட மறுத்ததால் புதுமாப்பிள்ளை எடுத்த முட்டாள்தனமான முடிவு பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது..
இன்றைக்கு திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இதற்கெல்லாமா வரும் என்பது போல் இருக்கிறது. கணவன் மனைவியிடம் கோபித்துக் கொள்வதற்கும், மனைவி கணவனிடம் கோபித்துக் கொள்வதற்கும் காரணங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அந்த அளவிற்கு வாழ்க்கை குறித்து சரியான புரிதல் இன்றி சிலர் இருக்கிறார்கள்.

விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை இல்லாதது, வாழ்க்கையில் கணவன் மனைவி பற்றிய சரியான கருத்துக்கள் இல்லாதது, கொஞ்சம் கூட தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாததது, சகிப்பு தன்மை குறைவு, அவமானங்களை எதிர்கொள்ள தெரியாதது, ஏமாற்றங்களை கையாளத்தெரியாதது போன்ற பல்வேறு காரணங்களால் ஒன்று விவகாரத்து கேட்கிறார்கள். மற்றொரு வகை தம்பதிகள், வாழ்க்கையையே முடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதாகும் மணிகண்டன் என்பவர் அங்கு பர்னிச்சர் கடையில் வேலை செய்தபோது தன்னுடன் வேலை செய்து வந்த 25 வயதாகும் சுபலட்சுமி என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 பேரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த திருமணத்துக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால், காதல் தம்பதி, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். சுபலட்சுமியின் சகோதரி மேனகாவும், அவருடைய கணவர் இருவரும் ஒரு கோவில் விசேஷத்திற்காக திருச்சி சென்று விட்டனர். வீட்டில் இருந்த மணிகண்டன் கடையில் கோழிக்கறி வாங்கி வந்து தனது மனைவியை சாப்பிட சொல்லி உள்ளார். அவர், தனது சகோதரி கோவிலுக்கு சென்று இருப்பதால் வீட்டில் கோழிக்கறி சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் உயிரை மாய்த்துக் கொண்டார். இதையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications