கணவனை விட்டு குழந்தைகளோடு பறந்த ’பச்சைக்கிளி’! கணவன் செய்த கொடூர செயல்! திடுக்கிட்ட திருப்பூர்!
திருப்பூர் : திருப்பூரை அடுத்த பொங்குபாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவியுடன் தகாத உறவு கொண்டிருந்ததால் இளைஞரை அப்பெண்ணிக் கணவரே கொலை செய்து எரித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரை அடுத்த பொங்குபாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கடந்த, 24ம் தேதி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, 15 வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவை பார்வையிட்டனர். நள்ளிரவு, 12:00 மணியளவில் டூவீலரில் ஒருவர் சடலத்தை மூட்டையாக கட்டி வந்து எரித்து சென்றது தெரிந்தது.

காட்டுக்குள் சடலம்
இதனடிப்படையில், சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் விசாரித்தனர். சடலம் கிடந்த, 2 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள தியாகி குமரன் காலனி, 3வது வீதியில், இரு நாட்களாக வீட்டில் கட்டப்பட்டிருந்த நாய் குரைத்து கொண்டிருந்தது. இதையடுத்து, அந்த வீட்டில் வசித்து வந்த ஐந்து பேர் தற்போது இல்லாததை போலீசார் அறிந்தனர். வீட்டின் உரிமையாளரை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

வீட்டுக்குள் சடலம்
பூட்டியிருந்த வீட்டுக்குள் கடும் துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து, வருவாய்த்துறையினர் முன்னிலையில் வீட்டுக்குள் நேற்று முன்தினம் மாலை தோண்டப்பட்டது. தோண்ட, தோண்ட துர்நாற்றம் மட்டுமே கடுமையாக வீசியது. அந்த குழிக்குள், உள்ளங்கையின் மேற்புறமாக உள்ள தோல் மற்றும் மொபைல் போன் சிக்கியது. வீட்டில் தங்கியிருந்த கள்ளக்காதலன் சிவகாசியை சேர்ந்த மணிகண்டன், அபிராமி , சத்யா , மகேஸ்வரி மற்றும் அபிராமியின் தாயார் பஞ்சவர்ணம் ஆகியோர் எங்கு சென்றார்கள், அவர்களின் நிலைமை என்னவென்று விசாரிக்க துவங்கினர்.

கள்ளக்காதலால் கொலை
அதில் சிவகாசியை சேர்ந்தவர் பரமசிவம். மனைவி அபிராமி தனது கணவர் பரமசிவத்தை விட்டு பிரிந்து தனது கள்ளக்காதலன் மணிகண்டன் , தனது 2 குழந்தைகள் மற்றும் தாயார் பஞ்சவர்ணம் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபிராமி தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். அதற்கு மறுநாள் வீட்டில் இருந்த பஞ்சவர்ணத்தை மற்றொரு ஆசாமி வந்து அழைத்து சென்று விட்டார் என்பது தெரியவந்தது.

விசாரணை
அபிராமியின் கணனரான பரமசிவம் தான் மணிகண்டனை கொலை செய்து உடலை எடுத்துச் சென்று எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை அபிராமியின் கணவர் பரமசிவம் கொலை செய்ததும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் செய்தால் மீண்டும் குழியை தோண்டி அவரது உடலை எடுத்துச் சென்று எரித்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து கொலையில் மர்மம் விலகி உள்ளதால் மேலும் இதில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications