விஜய் கட்டிப் பிடிக்க வேண்டியது அஜித்தை அல்ல.. தனுஷை! அரசியலை விட்டே போறேன்! அதிமுக மாஜி சவால்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: லண்டன் சென்று சிஎம் விஜய் அஜித்தை கட்டி பிடிப்பதற்கு காரணம், அஜித் அரசியலுக்கு வந்து விடுவார் என்பதால், அதை தடுக்கவே 'டேக்' சொன்ன பிறகு ஓடிப்போய் அஜித்தை கட்டிப் பிடித்தார் எனவும், விஜய் கட்டிப்பிடிக்க வேண்டியது அஜித்தை இல்லை.. தனுஷைத் தான் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். மேலும் தான் சொன்னத்தை விஜய் செய்து விட்டால் அரசியலை விட்டே விலகுவதாகவும் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அழகுமலை பிரிவு பகுதியில் உள்ள தனியா திருமண மண்டபத்தில் அதிமுக அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான ஆர்பி உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

RB Udhayakumar

அப்போது பேசிய அவர்," நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முழு விவரத்தையும் விஜய் தெரிவித்து விட்டால் அரசியலை விட்டு விலக நான் தயார் . விஜய்க்கு நான் சவால் விடுக்கிறேன். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை பற்றி முழுதாய் சொல்லுங்கள்.

லண்டன் சென்று விஜய் அஜித்தை கட்டி பிடிப்பதற்கு காரணம். அஜித் அரசியலுக்கு வந்து விடுவார் என்பதால், அதை தடுக்க வேண்டும் என 'டேக்' சொன்ன பிறகு ஓடிப்போய் அஜித்தை கட்டிப்பிடித்தார். நீங்கள் அஜித்தை கட்டி பிடிப்பது விடுத்து தனுஷை கட்டி பிடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் தான் அடுத்து நமசிவாய எனச் சொல்லிக் கொண்டு வருகிறார். இவரோ ஜோசப். இனி என்ன ஆகப் போகிறதோ?

விஜய் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது மின்சார தடை ஏற்படவில்லை. துணை ஜனாதிபதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் பக்தர்கள் செல்லும் பொழுது மின்வெட்டு கோவில் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது?" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+