திருப்பூர் இளைஞர்களுக்கு கலெக்டர் குட்நியூஸ்.. நல்ல வாய்ப்பு.. வெள்ளிக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந்தேதி காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருப்பூரின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று உடனுக்குடன் வேலைக்கான ஆர்டர்களை வழங்க உள்ளன.
பலர் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிறுவனத்தில் என்ன வேலை காலியாக உள்ளது.. எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அதேபோல் என்ன படித்தால் நல்ல வேலை கிடைக்கும். படிப்புடன் என்னென்ன கற்றுக்கொண்டால் வேலை கிடைப்பது எளிதாக இருக்கும். என்ன திறமைகளுக்கு என்ன ஊதியம் நிரந்தரமாக கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டால், வேலை, ஊதியம் மற்றும் மாற்றங்களை உணர முடியும்.

பொதுவாக அரசு வேலைகள் என்பது ஆண்டுக்கு சில ஆயிரம் பேருக்குத்தான் கிடைக்கிறது. ஆனால் பல லட்சம் பேர் படிப்பு முடிந்து வெளியேறுகிறார்கள். அவர்கள் தனியார் துறையில் தான் வேலைக்கு செல்கிறார்கள். அந்த வகையில் தனியார் துறையில் சரியான வேலையை பெற பலரும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்காக அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க போகிறது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந்தேதி காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை அளிக்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முகாம் நாளன்று பணிநியமன ஆணை வழங்கப்படும். முகாமில் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
கலந்துகொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட உரிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதாவது https://www.tnprivatejops.tn.gov.in என்ற தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications