எங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு
ஜிம் பயிற்சியாளரை 6 பேர் சரமாரி தாக்கி உள்ளனர்
Recommended Video
திருப்பூர்: "ஓ... எங்க கிட்டயே அட்வான்ஸ் கேட்பியா.. நாங்க இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்" என்று கூறி ஜிம் பயிற்சியாளரை ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் கவின் பிட்னஸ் என்ற பெயரில் ஜிம் நடத்தி வருகிறார் ஜெயமுருகன் என்பவர். இங்கு கேத்தன் பாளையத்தைச் சேர்ந்த வெஸ்லி டேனியல் என்ற இளைஞர் டிரெயினராக உள்ளார்.

இந்நிலையில், சந்தோஷ் என்பவர் இந்த ஜிம்மில் சேர வந்திருக்கிறார். சந்தோஷ் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்... ஜிம்மில் சேருவதாக சொல்வதால், அதற்கு அட்வான்ஸ் பணம் கேட்டார் வெஸ்லி.. ஆனால் தர மறுத்த சந்தோஷ், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே தனது நண்பர்களான கார்த்தி, தமிழ், குட்டிவிஷ்வா, அருண், ஆறுச்சாமி ஆகிய 6 பேரையும் கூட்டி வந்துவிட்டார். "நாங்க இந்து முன்னணியை சேர்ந்தவர்கள்.. எங்க கிட்டயே பணம் கேப்பியா" என்று சொல்லி வெஸ்லியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த காயமடைந்த வெஸ்லி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த, ஜிம் ஓனர் ஜெயமுருகன் பொதுமக்கள் உதவியுடன் சந்தோஷ், அந்த 6 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது சம்பந்தமான விசாரணை ஆரம்பமாகி உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் இல்லை என அதன் மாநில நிர்வாகி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications