திருப்பூர் ரிதன்யாவின் நிலைக்கு மூலக்காரணமான மாமியார் எங்கே.. அரசியல் அழுத்தம்.. கோபத்தில் குடும்பம்
திருப்பூர்: அரசியல் அழுத்தங்களால் திருப்பூர் ரிதன்யா வழக்கை கிடப்பில் போடுவதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உடல்நிலையைக் காரணம் காட்டி ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியை விடுவித்ததை ஏற்க முடியாது என்றும், அவர் தான் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்..
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழில் அதிபர் அண்ணாதுரை அந்த பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய மகள் ரிதன்யாவுக்கு 27 வயது ஆகிறது. இவருக்கும், கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்பமான ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு பெற்றோர்களின் ஏற்பாட்டின் பேரில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

ரிதன்யாவிக்கு திருமணம்
திருமணத்தின் போது வரதட்சணையாக ரிதன்யா வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2.5 கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். . ஆனால் இவ்வளவு செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தும் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை.
பல லட்சம் வருமானம்
ரிதன்யாவிடம் மாமனார் ஈஸ்வரமூர்த்தி (51), மாமியார் சித்ராதேவி (47) ஆகிய இருவரும் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி டார்ச்சர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் மாதம் பல லட்சம் வருமானம் வருகிறது என்பதால், கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளார்கள். அவர்கள் மூன்று பேரும் ரிதன்யாவை மன ரீதியாக டார்ச்சர் செய்தார்களாம். இதனால் காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
சித்ரா தேவி கைது இல்லை
மேலும் தனது இந்த நிலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி தந்தை அண்ணாதுரைக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார். இதையடுத்து, ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சித்ரா தேவியை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை
ரிதன்யாவின் குடும்பம் கோபம்
இதனால் ரிதன்யா குடும்பத்தினர் கோபம் அடைந்துள்ளனர். தங்கள் மகளின் நிலைக்கு காரணமானவனரை கைது செய்யாதது குறித்து வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். திருமணமான 20 நாட்களில் நள்ளிரவில் பிரச்சினை ஏற்பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்தார் என்றும், அப்போதே அவர் நிம்மதியை தொலைத்து விட்டார் என்றும் கூறினார்கள். ரிதன்யா உடலை பிரேதப்பரிசோதனை செய்யும் வரை, போலீஸார் விசாரணை முறையாக நடத்திய நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி சித்ரா தேவியை விடுவித்துள்ளார்கள் என்றும் இதனை ஏற்க முடியாது என்றும் ரிதன்யாவின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
ஏனெனில், குடும்பத்தில் நடந்த விஷயங்கள் அனைத்துக்கும் மூலகாரணமாக இருந்தவர்களுள் ஒருவர் மாமியார் சித்ராதேவி தான் என்றும், ரிதன்யாவின் உடலை பெறும்வரை 3 பேர் கைது என்று சொல்லிவந்த போலீஸார், சடலத்தைப் பெற்றதும் 2 பேரை மட்டும் கைது செய்துவிட்டு, சித்ராதேவியை விடுவித்துள்ளனர். அவரையும் கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்றும் அண்ணாதுரை தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
அரசியல் அழுத்தம்
அரசியல் அழுத்தங்களால் இந்த வழக்கை கிடப்பில் போடுவதற்கான முகாந்திரங்கள் உள்ளதாகவும், ரிதன்யா உயிரிழப்பில் உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் போலீஸார் விசாரணை, கோட்டாட்சியர் விசாரணையில் நியாயம் கிடைக்குமா என்று தங்களுக்கு சந்தேகம் இருப்பதால், முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்ணாதுரை பேட்டி
இதுபற்றி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், வரதட்சணை கொடுமையால் எனது மகள் உயிரை விட்டுள்ளார். போலீசார் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் கட்சியின் பின்புலம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அரசியல் அழுத்தம் காரணமாக மகள் வழக்கை போலீசார் நீர்த்துப்போக செய்து வருகிறார்கள். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சிபிஐ விசாரணை
ஆனால் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகிய 2 பேரை மட்டுமே கைது செய்து உள்ளனர். சித்ராதேவி இன்னும் கைது செய்யப்படவில்லை. போலீசார் உரிய விசாரணை நடத்த மாட்டார்கள். எனவே எனது மகள் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்த வேண்டும் என்று கூறி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்து உள்ளோம்" என்று கூறினார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications