கழகம் அறிவோம்! பதிலை சொல்லுங்க.. பாராட்டை பெறுங்க! புது ஸ்டைலில் கட்சி வளர்க்கும் அமைச்சர் சாமிநாதன்
திருப்பூர்: திமுக உயர்மட்டக் குழு உறுப்பினரும், அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் வேற லெவலில் கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
டிவிட்டர் உள்ளிட்ட தனது சமூக வலைதளப் பக்கங்களில் கழகம் அறிவோம் என்ற பெயரில் தொடர்ச்சியாக கேள்வி பதில் மூலம் திமுக வரலாற்றை இளம் தலைமுறைகள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்.
தாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களை பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர்களின் புகைப்படத்துன் கூடிய விவரத்தையும் வெளியிட்டு பெருமைப் படுத்துகிறார் அமைச்சர் சாமிநாதன்.

செய்தித்துறை அமைச்சர்
திமுக உயர்மட்டக் குழு உறுப்பினரும், செய்தித்துறை அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர். இதேபோல் கட்சிக்காரர்களிடமும் சரி, அதிகாரிகளிடமும் சரி அதிர்ந்து பேச மாட்டார். இப்படி சத்தமில்லாமல் இருக்கும் இவர் சமூக வலைதளங்கள் மூலம் ஒரு சாதனையை நிகழ்த்தி வருகிறார். கடந்த பல மாதங்களாக கழகம் அறிவோம் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக திமுக வரலாற்றையும், கருணாநிதி, ஸ்டாலின் போன்றோரின் கட்சி வளர்ச்சிப் பணிகளையும் கேள்வி பதில் வாயிலாக இளம் தலைமுறைகள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்.

சமூக வலைதளம்
தமிழகத்தின் மற்ற அமைச்சர்கள் யாரும் செய்யாத ஒன்றை இவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார். இவரது இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. சரியான பதில் அளிப்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர்களை பாராட்டி பெருமையும் படுத்தி வருகிறார் அமைச்சர் சாமிநாதன். அண்மையில் கூட கருணாநிதி போட்டியிட்ட தொகுதிகளின் விவரங்கள் பற்றி கேள்வி வெளியிட்டிருந்தார்.

ஊக்குவிப்பு
இது போன்ற ஊக்குவிப்புகளும், போட்டிகளும் திமுகவில் உள்ள இளம் தலைமுறைகளை உற்சாகம் கொள்ள வைக்கும் என நம்பப்படுகிறது. செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை பொறுத்தவரை திமுக இளைஞரணியில் இருந்து படிப்படியாக முன்னேறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலினுக்கு பிறகு திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்ததன் மூலம் அக்கட்சியின் வரலாற்றில் இடமும் பிடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

பேசி பேசியே
ஒரு காலத்தில் பேசி பேசியே வளர்க்கப்பட்ட இயக்கம் திமுக என்பதும் கால ஓட்டத்தில் சினிமா வசனம், பாடல், பத்திரிகை, என பல வழிகளில் அக்கட்சி வளர்க்கப்பட்டது என்பதும் திரும்பிப் பார்க்கத்தக்கது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications